11,000க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்கள், காணொளிகளைத் தமக்குச் சொந்தமான சாதனங்களில் வைத்திருந்த ஆடவருக்கு ஒன்பது வாரச் சிறைத் தண்டனையும் $26,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எஸ்ஜி நாசி லெமாக் டெலிகிராம் உரையாடல் குழுவை நிர்வகிப்பவரான 39 வயது லியோங் தியேன்வெய் ஒப்புக்கொண்டார்.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை எஸ்ஜி நாசி லெமாக்கிற்கு எதிராக போலிசில் 31 புகார்கள் செய்யப்பட்டன.

