12 நாள்களுக்குப் பின் நோயெதிர்ப்பு செல்கள்

12 நாள்களுக்குப் பின் நோயெதிர்ப்பு செல்கள்

1 mins read

ஃபைசர்-பயோ­என்­டெக் முதல் தடுப்­பூசியைப் போட்­டுக்­கொண்ட 12 நாள்­களில் இருந்து, கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான குறிப்­பிட்ட வகை நோயெ­திர்ப்­புப் பொருள்­களும் செல்­களும் உட­லில் உரு­வாக அத்­த­டுப்­பூசி உத­வும் என்­பதை சிங்­கப்­பூர் ஆய்­வா­ளர்­கள் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

95% செயல்­தி­றன் கொண்ட அத்­த­டுப்­பூ­சியை மூன்று வார இடை­வெ­ளி­யில் இரு முறை போட்­டுக்­கொள்ள வேண்­டும்.

முன்னதாகவே உரு­வா­கும் நோயெ­திர்ப்­புப் பொருள்­க­ளா­லும் 'டி-செல்­கள்' எனும் குறிப்­பிட்ட வகை நோயெ­திர்ப்பு செல்­க­ளா­லும் இந்­தப் பாது­காப்பு கிடைக்­கிறது என்று சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை மற்­றும் டியூக்-என்­யு­எஸ் மருத்­து­வப் பள்ளியைச்ச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் குழு­ கண்டுபிடித்து இருக்கிறது.