மருந்தகத்தின்மீது 35 புகார்கள்

மருந்தகத்தின்மீது 35 புகார்கள்

2 mins read

சிக்­க­லில் இருக்கும் நொவினா குளோ­பல் ஹெல்த்­கேர் நிறு­வ­னத்­தின் துணை நிறு­வ­ன­மான நொவு எஸ்­தெட்­டிக்ஸ் மருந்­த­கக் குழு­மத்­தி­டம் போதிய நிதி­வ­ளம் இல்­லா­த­தால் மருத்­து­வர்­கள் வேலை­மு­றைப் பட்­டி­ய­லில் இருந்து விடு­விக்­கப்­பட்­ட­னர்; ஊழி­யர்­கள் சிலர் ஊதி­யம் பெறா­ம­லேயே வேலை­யை­விட்­டுச் சென்­று­விட்­ட­னர்; நோயா­ளி­கள் சிகிச்­சைக்கு முன்­பதிவு செய்ய முடி­ய­வில்லை.

ராஃபிள்ஸ் சிட்­டி­யி­லும் நார்த்­பாய்ண்ட் கடைத்­தொ­கு­தி­யி­லும் இருந்த அதன் இரு மருந்­தகங்­கள் நிரந்­த­ர­மாக மூடப்­பட்­டு­விட்­டதை ஸ்ட்­ரெட்ய்ட்ஸ் டைம்ஸ் செய்தி உறுதிப்படுத்தியது.

நொவு வணி­கச்­சின்­னத்­தின்­கீழ் செயல்­படும் நொவு எஸ்­தெட்­டிக்ஸ் மருந்­த­கங்­கள் மற்­றும் பிற நிறு­வ­னங்­கள் மீது கடந்த பிப்­ர­வரி 1 முதல் நேற்று முன்­தி­னம் வரை 35 புகார்­கள் வந்­தி­ருப்­ப­தா­கச் சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கம் (கேஸ்) தெரி­வித்­தது.

அந்­தப் புகார்­க­ளின் ஒட்­டு­மொத்த ஒப்­பந்த மதிப்பு 43,000 வெள்­ளிக்கு மேல் என்று 'கேஸ்' அமைப்­பின் தலை­வர் லிம் பியாவ் சுவான் குறிப்­பிட்­டார்.

"சிகிச்­சை­ய­ளிக்க மருத்­து­வர்­கள் இல்­லா­த­தால் தங்­க­ளால் சிகிச்சை அமர்­வு­க­ளுக்கு முன்­பதிவு செய்ய முடி­ய­வில்லை என்­பதே பெரும்­பா­லா­னோ­ரின் புகா­ராக இருக்­கிறது. புகார்­கள் தொடர்­பில் தீர்வுகாண நொவு எஸ்­தெட்­டிக்ஸ் நிறு­வனத்தை அணு­கி­யுள்­ளோம். இன்­னும் அத­னி­ட­மி­ருந்து பதில் வர­வில்லை," என்று திரு லிம் கூறினார்.

253 சிராங்­கூன் சென்ட்­ரல் டிரைவ், பிடோக் கடைத்­தொ­குதி, ஜெம் கடைத்­தொ­குதி, ஜூரோங் பாய்ஸ்ட் ஆகிய இடங்­களில் அமைந்­துள்ள நொவு எஸ்­தெட்­டிக்­சின் மற்ற நான்கு மருந்­த­கங்­கள் செயல்­பாட்­டில் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"பொது­வாக, வர்த்­த­கங்­கள் நொடித்­துப் போகும் பட்­சத்­தில், முன்­கூட்­டியே செலுத்­திய பணத்­தைப் பய­னீட்­டா­ளர்­கள் திரும்­பப் பெறு­வது என்­பது சவா­லா­னது. ஆகை­யால், இப்­போ­தைய பொரு­ளி­யல் சூழ­லில், முன்­ப­ணம் செலுத்­தும்­போது விழிப்­பு­ட­னும் எச்­ச­ரிக்­கை­யா­க­வும் இருக்க வேண்­டும் எனப் பய­னீட்­டா­ளர்­களுக்கு அறி­வு­றுத்­து­கி­றோம்," என்­றார் திரு லிம்.

இத­னி­டையே, நிதி­நிலை அறிக்­கை­களில் 'எர்ன்ஸ்ட் அண்ட் யங்' கணக்­கி­யல் நிறு­வ­னத்­தின் போலி­யான கையெ­ழுத்­து­க­ளைப் பயன்­படுத்­தி­யது தொடர்­பில் நொவினா குளோ­பல் ஹெல்த்­கேர் குழு­மத்­தி­டம் போலிஸ் விசா­ரித்து வரு­கிறது.