இல்லத்தனிமை உத்தரவு மீறல் தொடர்பாக மாணவியிடம் நீதிமன்றத்தில் விசாரணை

இல்லத்தனிமை உத்தரவு மீறல் தொடர்பாக மாணவியிடம் நீதிமன்றத்தில் விசாரணை

2 mins read
6fd9772c-bf75-4645-a2f8-d66e881abd52
-

பிரிட்­டன் மாணவி ஒரு­வர் கொவிட்-19 விதியை அலட்­சி­யம் செய்­த­தன் தொடர்­பில் நேற்று நீதி­மன்ற விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டார்.

எஸ்­தர் டான் லிங் யிங், 24, (படம்) என்­னும் அவர் கடந்த ஆண்டு மார்ச் 24ஆம் தேதி சிங்­கப்­பூர் திரும்­பி­னார். அதற்கு சில தினங்­கள் முன்­ன­தாக, வெளி­நாடு­களில் இருந்து வரு­வோ­ருக்­கான இல்­லத் தனிமை உத்­த­ரவை சிங்­கப்­பூர் பிறப்­பித்­தி­ருந்­தது. சளிக்­காய்ச்­சல் போன்ற அறி­கு­றி­யு­டன் அவர் பிரிட்­ட­னில் இருந்து வந்­த­தாகவும் பின்­னர் அவ­ருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

இல்­லத்­த­னிமை உத்­த­ரவை மீறி சாங்கி விமா­ன­ நி­லை­யம் 1ஆம் முனை­யத்­தில் உள்ள உண­வ­கம் ஒன்­றிற்­குச் சென்­றார். பின்­னர் அதே நாளில் கிள­மெண்­டி­யில் ஒரு மருத்­து­வ­ரைச் சென்று பார்த்­த­போது தமது பயண விவ­ரங்களை பொய்­யா­கத் தெரி­வித்­தார்.

இது குறித்து நேற்று நீதி­மன்ற விசா­ர­ணை­யின்­போது அர­சுத்­த­ரப்பு துணை வழக்­க­றி­ஞர் சஞ்­சீவ் வஸ்­வானி கூறு­கை­யில், "ஒரு­சி­லர் மட்­டும் விதி­கள் தங்­க­ளுக்­கா­னவை அல்ல என்று கரு­து­கி­றார்கள். குற்­றம் சாட்­டப்­பட்­டுள்ள எஸ்­தர் டானும் அவர்­களில் ஒரு­வர்," என்­றார்.

குடி­நு­ழைவு சோத­னைச்­சா­வடி ஆணைய அதி­காரி ஒரு­வர் நேற்று சாட்­சி­யாக முன்­னிலை ஆனார். 2020 மார்ச் 23ஆம் தேதி சாங்கி விமான நிலை­யத்­தில் நாடு திரும்­பிய பய­ணி­கள் பற்­றிய விவ­ரங்­களை அவர் தெரி­வித்­தார்.

ஆனால் அன்­றைய தினம் 14 நாள் இல்­லத்­த­னிமை உத்­த­ரவு பற்றி தெளி­வான தக­வல் இல்லை என்­றும் அது எவ்­வாறு செயல்­படும் என குடி­நு­ழைவு சோத­னைச்­ச­வாடி ஆணைய அதி­கா­ரி­க­ளுக்­குக்கூட அப்­போது தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை என்­றும் தற்­காப்பு வழக்­க­றி­ஞர் டான் செங் கியோங் வாதிட்­டார்.

தொற்றுநோய் தடுப்­புச் சட்­டத்­தின்­கீழ் மற்­ற­வர்­க­ளுக்கு கொவிட்-19 நோயைப் பரப்­பி­வி­டும் அபா­யத்தை உரு­வாக்­கி­ய­தாக அந்த மாணவி மீது குற்­றம் சுமத்­தப்­பட்டு உள்­ளது.

இந்­தக் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் ஆறு மாதம் வரை­யி­லான சிறை, $10,000 வரை­யி­லான அப­ரா­தம் ஆகி­யன விதிக்­கப்­ப­ட­லாம். விசா­ரணை தொட­ரு­கிறது.