சிங்கப்பூர் ஆயுதப்படையின் தொண்டூழியர் படையினரைச் சந்திக்க தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது (படத்தில் வலமிருந்து இரண்டாவது) நேற்று மாஜு முகாமுக்குச் சென்றார். ஆயுதப்படையின் தொண்டூழியர் படையில் புதிதாகச் சேர்ந்த 47 வீரர்கள் அடிப்படைப் பயிற்சி மேற்கொள்வதை திரு ஸாக்கி பார்வையிட்டார்.
'சார் 21' எனப்படும் பகுதி தானியக்க துப்பாக்கியைக் கொண்டு உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்தும் குறிசுடுதல் நடவடிக்கைக்குத் தங்களைத் தயார்ப்படுத்தும் விதமாக தொண்டூழியப் படையினர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்ததால் சிங்கப்பூர் ஆயுதப்படையின் தொண்டூழியர் படையினருக்கான பயிற்சி பாதிக்கப்பட்டிருந்தது. படம்: தற்காப்பு அமைச்சு

