ஏராளமான ஆபாசப் படங்களை வைத்திருந்தவருக்கு சிறை, அபராதம்

ஏராளமான ஆபாசப் படங்களை வைத்திருந்தவருக்கு சிறை, அபராதம்

1 mins read

டெலி­கி­ராம் செய­லி­யில் 'எஸ்ஜி நாசி லெமாக்' எனும் உரை­யா­டல் குழுவை நிர்­வ­கித்த லியோங் தியென்­வெய், 39, என்­ப­வ­ரின் மின்­னி­லக்­கச் சாத­னங்­களில் 11,000க்கும் அதி­க­மான ஆபா­சப் புகைப்­ப­டங்­கள், காணொ­ளி­கள் இருந்­தது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

அவ­ருக்கு நேற்று ஒன்­பது வாரச் சிறைத் தண்­டனையும் $26,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது. இரு பிள்­ளை­க­ளுக்­குத் தந்­தை­யான இவர், குற்­றங்­க­ளைப் புரிந்த சம­யத்­தில் வேலை­யின்றி இருந்­தார்.

2019 மார்ச் முதல் அக்­டோ­பர் வரை 'எஸ்ஜி நாசி லெமாக்' குழுக்கு எதி­ராக போலி­சி­டம் 31 புகார்­கள் அளிக்­கப்­பட்­டி­ருந்­தன.

ஆபா­சப் புகைப்­ப­டங்­க­ளை­யும் காணொ­ளி­க­ளை­யும் பகி­ரும் தள­மாக அந்­தக் குழு பயன்­ப­டுத்­தப்­பட்­டது. 2018 நவம்­ப­ரில் உரு­வாக்­கப்­பட்ட அந்­தக் குழு­வில் இடம்­பெற்ற உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை ஒரு கட்­டத்­தில் 44,000ஆக உயர்ந்­தது.

2019 அக்­டோ­பர் 14ஆம் தேதி போலிஸ் மேற்­கொண்ட திடீர் சோத­னை­யின்­போது லியோங் உட்­பட நான்கு சந்­தேக நபர்­கள் கைது செய்­யப்­பட்­டனர். லியோங்­கின் மடிக்­க­ணி­னி­யை­யும் ஐந்து கைபே­சி­க­ளை­யும் போலி­சார் பறி­மு­தல் செய்­த­னர்.