இவ்வாண்டு சிங்கப்பூரின் பொருளியல் 5.8% வளர்ச்சி பெறும் என்று தனியார் துறை பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்துள்ளனர். இதற்கு முன்பு சிங்கப்பூரின் பொருளியல் 5.5% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 24 பொருளியல் நிபுணர்கள் முன்வைத்திருக்கும் இந்த முன்னுரைப்பை சிங்கப்பூர் நாணய ஆணையம் அதன் காலாண்டு ஆய்வில் குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 விழுக்காட்டிலிருந்து 6 விழுக்காடு உயரும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு கடந்த மாதம் முன்னுரைத்தது. இந்த மாதத்துக்கும் அதே அளவு வளர்ச்சியை அமைச்சு முன்னுரைத்துள்ளது.
சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 5.8% உயரும் என முன்னுரைப்பு
1 mins read

