கொண்டோமினிய மறுவிற்பனை விலை அதிகரிப்பு

கொண்டோமினிய மறுவிற்பனை விலை அதிகரிப்பு

1 mins read
85ec52be-e5e6-4c03-b885-d85831d9b507
விற்கப்பட்ட கொண்டோமினிய மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. கோப்புப்படம் -

கொண்டோமினிய வீடுகளின் மறுவிற்பனை விலை தொடர்ந்து ஏழு மாதங்களாக அதிகரித்துள்ளது. விலையுடன், விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்தன.

கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் கொண்டோமினிய மறுவிற்பனை விலை ஒரு விழுக்காடு உயர்ந்தது.

ஆண்டுக்காண்டு அடிப்படையில் கொண்டோமினிய மறுவிற்பனை விலை 4.4 விழுக்காடு அதிகரித்தது.

மாதத்துக்கு மாத அடிப்படையில் விற்கப்பட்ட கொண்டோமினிய வீடுகளின் எண்ணிக்கை 0.4 விழுக்காடு ஏற்றம் கண்டது.

தொடர்ந்து எட்டு மாதங்களாக கடந்த மாதம் 1,000க்கும் மேற்பட்ட கொண்டோமினிய மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன.