'சைவ கோழிக்கறி' மார்ச் 18 முதல் 11 கடைகளில் விற்பனை

'சைவ கோழிக்கறி' மார்ச் 18 முதல் 11 கடைகளில் விற்பனை

1 mins read
e71d1538-e9d7-4dc9-b769-50e980b0208a
'பேஸ்வாட்டர் கிட்ச'னின் கோழிக்கறி வறுவல். படம்: டிண்டல் -

தாவர அடிப்­ப­டை­யி­லான சைவ கோழிக்­க­றி உணவுகள் சிங்­கப்­பூ­ரின் 11 உணவு நிறு­வ­னங்­களில் வரும் 18ஆம் தேதி முதல் விற்­ப­னைக்கு வர­வுள்­ளன.

அண்­மை­யில் $13.4 மில்­லி­யன் நிதி­யைத் திரட்­டிய 'நெக்ஸ்ட் ஜென் ஃபூட்ஸ்' நிறு­வ­னம் 'டிண்­டல்' எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள சைவ கோழிக்­ க­றியை விற்­ப­னைக்­குக் கொண்டு வரு­கிறது.

அந்த நிறு­வ­னம் தயா­ரித்த 'டிண்­டல் தை' எனும் சைவ கோழிக்­கறி தண்­ணீர், சோயா, தேங்­காய்க் கொழுப்பு, சூரி­ய­காந்தி எண்­ணெய் உட்­பட 9 பொருள்­கள் சேர்த்­துத் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது. 'லிபி' எனப்­படும் அந்த நிறு­வ­னத்­தின் சொந்­தத் தயா­ரிப்­பான தாவர அடிப்படை­யி­லான கொழுப்­பு­கள் மற்­றும் வாச­னைப் பொரு­ளும் அதில் சேர்க்­கப்­பட்­டுள்­ளன.

சுகா­தார மேம்­பாட்டு வாரி­யத்­தால் 'ஆரோக்­கி­ய­மான தெரிவு' எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்ள இந்த கோழிக்­க­றி­யில் 'ஆன்­டி­ப­யோட்­டிக்', 'ஹார்­மோன்' போன்­றவை இல்லை. இதில் பூரித கொழுப்­பின் அள­வும் சோடி­யத்­தின் அள­வும் குறைவு.

ராபர்ட்­சன் கீயில் உள்ள 'திரி பன்ஸ்', பீச் ரோட்­டில் இருக்­கும் 'அட்டா' எனும் இந்­திய உண­வ­கம், 10 உண­வுக் கடை­க­ளைக் கொண்­டுள்ள 'பிரைவ்' கடைத் தொகுப்பு, தெலுக் ஆயர் ஸ்தி­ரீட்­டில் உள்ள 'தி மார்க்­கெட் கிரில்', ஓஷியன் ஃபைனான்­ஷி­யல் சென்­ட­ரில் இருக்­கும் 'தி குட்­பர்­கர்' உட்பட 11 உணவு நிறுவனங்களின் உண­வ­கங்­களில் இந்த சைவ கோழிக்­க­றி­யைப் பயன்­ப­டுத்தி வித­வி­த­மான உண­வு­கள் விற்­கப்­படும்.