கடையில் தீ மூண்டதையடுத்து சைனாடவுன் பாயிண்ட் கடைத்தொகுதியில் இருந்து 100 பேர் வெளியேற்றப்பட்டனர்

கடையில் தீ மூண்டதையடுத்து சைனாடவுன் பாயிண்ட் கடைத்தொகுதியில் இருந்து 100 பேர் வெளியேற்றப்பட்டனர்

1 mins read
3f23bbce-92b4-4f4a-8867-b19381a9249d
கடையில் தீ மூண்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கரும்புகை பல இடங்களுக்குப் பரவியது. படங்கள்: ஐரின் ஹோ, டேவிஸ் லிம்/ஃபேஸ்புக் -

சைனாடவுன் பாயிண்ட் கடைத்தொகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்து ஏறக்குறைய 100 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

கடைத்தொகுதியின் முதல் தளத்தில் உள்ள 'லக்‌ஷரி சிட்டி' கடையில் இன்று காலை 10.15 மணியளவில் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடைக்கு அருகே மக்கள் செல்லாமல் இருக்க தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கடைத்தொகுதியைவிட்டு வெளியேற பாதுகாப்பு அதிகாரிகள் உதவினர். அதேவேளையில் வேறு எவரும் கடைத்தொகுதிக்குள் நுழையாமலும் அதிகாரிகள் பார்த்துக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்