தீவு விரைவுச்சாலையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில் 57 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மாண்டார்.
துவாஸ் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் புக்கிட் தீமா விரைவுச்சாலைக்கு வெளியேறும் இடத்துக்கும் முன்பாக விபத்து நிகழ்ந்ததாக இன்று காலை 6.45 மணி அளவில் போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.
கவனக்குறைவுடன் சிறு பேருந்தை ஓட்டி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு மரணம் விளைவித்த குற்றத்துக்காக 38 ஆடவர் கைது செய்யப்பட்டார்