பள்ளிப் பணியாளர்கள் தடுப்பூசி பெற அழைப்பு

பள்­ளிக்­கூட ஆசி­ரி­யர்­கள், முதல்­வர்­கள் மற்­றும் பணி­யா­ளர்­கள் அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முன்­வ­ர­வேண்­டும் என கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் அழைப்பு விடுத்­துள்­ளார்.

தங்­க­ளை­யும் மாண­வர்­க­ளை­யும் கொவிட்-19 கிருமி தொற்­றா­மல் பாது­காத்­துக்­கொள்ள தலை­சி­றந்த வழி அது­தான் என்று அவர் தெரி­வித்­துள்­ளார். ஆங்­லிக்­கன் உயர்­நி­லைப் பள்­ளி­யின் 65வது ஆண்­டு­விழா கொண்­டாட்­டம் நேற்று நிகழ்ந்­த­போது அதில் கலந்­து­கொண்­டு பேசியபோது அமைச்­சர் இவ்­வாறு வலி­யு­றுத்­தி­னார்.

கல்வி நிலை­யங்­களில் பணி­யாற்­றும் 150,000க்கும் மேற்­பட்­டோ­ருக்கு பல­ன­ளிக்­கும் வித­மாக சிங்­கப்­பூ­ரின் தடுப்­பூசி இயக்­கம் விரிவுபடுத்தப்பட்டு உள்­ளது. மூத்­தோ­ருக்கு தடுப்­பூசி போடு­ வ­தில் இருந்து தொடங்­கிய இயக்­கம், வேக­ம­டைந்து வரு­கிறது. அதி­க­மான தடுப்­பூசி மருந்­து­கள் சிங்­கப்­பூரை வந்­த­டைந்­துள்­ள­தைத் தொடர்ந்து ஆசி­ரி­யர்­கள் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யப் பணி­யா­ளர்­கள், அதிக ஆபத்­தில்­ உள்ள குழு­வி­னர் போன்றோருக்­கும் தடுப்­பூசி பணி விரி­வு­ப­டுத்­தப்­பட்டுள்­ளது.

குழந்­தை­க­ளு­ட­னும் இளை­யோ­ரி­ட­மும் அதிக நேரம் செல­வி­டு­வ­தால் ஆசி­ரி­யர்­கள் இத்­திட்­டத்­தில் பலன்­பெற உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு கூறி­யி­ருந்­தது. 16 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்கு தடுப்­பூசி போட இன்­னும் பரிந்­து­ரைக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வே­ளை­யில், ஆங்­லிக்­கன் உயர்­நி­லைப் பள்­ளி­யைச் சேர்ந்த ஆசி­ரி­யர்­கள் மற்றும் பணியாளர் களில் 90 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள இது­வ­ரை­ பதிந்து­கொண்­டுள்­ள­தாக அந்­தப் பள்­ளி­யின் முதல்­வர் கூ ட்ஸி ஹோர்ங், 54, தெரி­வித்­தார்.

இத­னி­டையே, இந்­தப் பள்­ளி­யின் ஆண்­டு­விழா கொண்­டாட்­டம் கொவிட்-19 கார­ண­மாக சிறிய அள­வில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. மாண­வர்­கள், ஊழி­யர்­கள், முன்­னாள் மாண­வர்­கள், சிறப்பு வரு­கை­யா­ளர்­கள் உட்­பட ஏறத்­தாழ 120 பேர் நேற்று அப்­பர் சாங்கி ரோட்­டில் இருக்­கும் முகா­முக்­குச் சென்று மறு­ப­ய­னீட்டு முகக்­க­வ­சங்­க­ளால் ஆன முகக்­க­வ­சத் தொகுப்பு ஒன்றை வழங்­கி­னர்.

கடந்த மாதங்­களில் வெவ்­வேறு வகை­யான 1,500 முகக்­க­வ­சங்­களை கழுவி, சுத்­தப்­ப­டுத்தி அலங்­கா­ர­மாக மாற்­றிய மாண­வர்­கள் பள்­ளிக்கு வாழ்த்து தெரி­விக்­கும் வாச­கங்­களை அதில் எழு­தி­னர்.

முகக்­க­வ­சங்­க­ளால் அலங்­க­ரிக்­கப்­பட்ட ஓவி­யத்­திரை ஆகப்­பெ­ரிய முகக்­க­வ­சத் தொகுப்­பாக சிங்­கப்­பூர் சாத­னைப் புத்­த­கத்­தில்­ இ­டம்­பி­டித்­துள்­ளது. கொள்ளைநோய் பரவல் போன்ற சிர­ம­மான காலத்­தி­லும் திற­மையை வெளிப்­ப­டுத்­தும் பள்­ளி­யின் குழு உணர்­வும் உன்­ன­த­மும் இந்தச் சாதனை மூலம் வெளிப்­பட்­ட­தாக ஆங்கி­லிக்­கன் பள்­ளி­யின் குடி­யு­ரிமை கல்­விப் பிரி­வின் தலை­வர் இயோ யோங் கெங், 43, குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!