சிரமமான காலத்தில் உதவிக்கரம் நீட்டிய தொண்டூழியர்கள்

கொவிட்-19 கிரு­மித்­தொற்று 2020ன் தொடக்­கத்­தில் சிங்­கப்­பூரைப் பாதிக்கத் தொடங்கியபோது உதவி தேவைப்­படும் சமூ­கத்­தி­ன­ரின் தேவை­களைப் பூர்த்­தி­செய்­வதில் சவால்­கள் எழுந்­தன.

குடும்­பங்­க­ளின் தேவை­களை தொடர்ந்து பூர்த்தி செய்வதில் சிண்­டா­வுக்கு உதவ 1,000க்கும் மேற்­பட்ட தொண்­டூ­ழி­யர்­கள், சமூ­கப் பங்­கா­ளி­கள், பள்­ளி­கள் ஆகி­யோ­ரின் பங்­க­ளிப்பு உறு­து­ணை­யாக இருந்­தது.

சமூ­கத்­தி­ன­ரின் வாழ்­வில் நேர்­ம­றை­யான மாறு­தலை ஏற்­ப­டுத்­திய இவர்­க­ளது பங்­க­ளிப்பை அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில் சிண்டா நேற்று பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை இணை யம் வழி நடத்­தி­யது.

பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரும் தேசிய வளர்ச்சி, நிதி இரண்­டாம் அமைச்­ச­ர் மற்றும் சிண்­டா நிர்­வா­கக் குழுத் தலை­வ­ரு­மான குமாரி இந்­தி­ராணி ராஜா இந்நிகழ்வில் பங்கேற்றுப் பேசினார். சிண்­டா­வின் முது­கெ­லும்­பாக தொண்­டூ­ழி­யர்­கள் உள்ளதாகவும் புதிய திட்­டங்­க­ள், கொள்­கை­கள் போன்றவற்றை வரைந்­தா­லும் மக்­களைச் சென்­ற­டைந்து மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும் பணி தொண்­டூ­ழி­யர்­க­ள் வசமே உள்­ளது என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

இவ்­வாண்டு சமூ­கப் பங்­கா­ளி­கள், பள்­ளி­கள், தொண்­டூ­ழி­யர்­கள், வெவ்­வேறு துறைகளைச் சேர்ந்த நிபு­ணர்­களை உள்­ள­டக்­கும் சிண்­டா­வின் துணைக்­கு­ழு­வி­னர் என 4 பிரி­வு­களில் மொத்­தம் 208 விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

சமூ­கப் பங்­காளி பிரி­வில், சொங் பாங் மக்­கள் கழக இந்­தி­யர் நற்­ப­ணிக் செயற்­குழு அங்கீ­க­ரிக்­கப்­பட்­டது.

“சொங் பாங் வட்டார வீடு­க­ளுக்­குச் சென்று, பிரச்­சி­னை­களைக் கண்­ட­றிந்து, அவர்­கள் உதவி நாடு­வ­தற்கு சிண்­டாவை பரிந்­து­ரைத்­தோம். வேலை தேடு­தல், வசதி குறைந்த பின்­ன­ணி­யி­லி­ருந்து வரும் பிள்­ளை­க­ளுக்கு துணைப்­பாட வகுப்பு ஏற்­பா­டு­கள், முதி­யோர் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு ஆலோ­சனை வழங்குதல் என பல்­வேறு தீர்­வு­க­ளுக்கு சிண்டா வழி

­வ­குக்க, அத்­திட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்­கி­ய­தில் எங்­க­ளுக்கு மகிழ்ச்சி,” என்று கூறி­னார் சொங் பாங் மக்­கள் கழக இந்­திய நற்­பணி செயற்­கு­ழு­வின் தலை­வர் திரு ரா.சுப்­பிர­ம­ணி­யம், 57.

தொண்­டூ­ழி­யர் பிரி­வில், சிண்­டா­வின் இளை­யர் மன்ற துணைத் தலை­வர் 38 வயது திரு ராகுல் தஸ்­வானி கெள­ர­விக்­கப்­பட்­டார்.

கடந்த 2014ஆம் ஆண்­டி­லி­ருந்து சிண்­டா­வின் இளை­யர் நட­வ­டிக்­கை­களில் தொண்­டூ­ழி­யம் புரிந்து வரும் இவர், இளை­யர்­கள் மேற்­ப­டிப்பு முடித்து வேலைக்குச் செல்­லும்­போது அதற்­கு­ரிய மாற்­றங்­க­ளுக்கு அவர்­கள் தயா­ராக இருப்­ப­தில் கவ­னம் செலுத்­தி­னார்.

“எதிர்­பா­ராத நிகழ்­வு­களை சமா­ளிப்­பது, கருத்­து­களை வெளிப்­

ப­டை­யாகப் பகிர்ந்­து­கொள்­வது போன்ற உத்­தி­களை தொண்­டூ­ழிய அனு­ப­வம் வழி கற்­றுக்­கொண்­டேன். மற்ற இளை­யர்­க­ளை­யும் தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­ப­டுத்த வேண்­டும் என்ற உற்­சா­கத்தை இவ்­வி­ருது அளிக்­கிறது,” என்று கூறி­னார் தொண்­டூ­ழி­யர் பிரி­வில் விருது பெற்ற குமாரி அ. சிவ­காமி, 19.

“தொண்­டூ­ழிய முயற்­சி­களை கொண்­டா­டு­கை­யில், சமூ­கத்தை முன்­னுக்கு கொண்­டு செல்ல இன்­னும் கூடு­த­லான சமூ­கப் பங்­கா­ளி­களும் தொண்­டூ­ழி­யர்­களும் சிண்­டா­வு­டன் இணை­வர் என்று நம்­பு­கி­றோம்,” என்று தெரி­வித்­தார் சிண்­டா­வின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு ரா.அன்­ப­ரசு.

மூத்த அமைச்­ச­ரும் சிண்­டா­வின் தலை­வ­ரு­மான திரு தர்­மன் சண்மு­க­ ரத்­ன­மும் நி­கழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!