பூமலையில் புதிய அம்சங்கள் புதிய கலைக்கூடத்தில் காலனித்துவ ஓவியங்கள்; விளையாட்டுத் திடல்; ஆய்வு மையம்

பூமலையில் புதிய அம்சங்கள் புதிய கலைக்கூடத்தில் காலனித்துவ ஓவியங்கள்; விளையாட்டுத் திடல்; ஆய்வு மையம்

2 mins read
78941e90-5e99-4c37-a0c5-42ae92f0692e
-

சிங்­கப்­பூர் பூம­லை­யில் காலனித்துவ ஆட்­சிக்கால பங்களா கட்­ட­டம் புதுப்­பிக்­கப்­பட்டு இருக்­கிறது. அதில் காலனித்துவ காலத்­தைச் சேர்ந்த கலை­யம்ச பொருட்­கள் காட்­சிக்கு இடம்­பெற்று இருக்­கின்­றன. 'கேலப் ஹவுஸ் எண் 7' என்ற கட்­ட­டத்தை பூமலை கலைக்­கூ­ட­மாக தேசிய பூங்­காக் கழ­கம் மாற்றி இருக்­கிறது.

பூம­லை­யின் ஆவ­ணக் காப்­பகத்­தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்­பட்ட ஓவி­யங்­களும் வண்ண வரை­படங்­களும் அங்கு காட்­சிக்கு வைக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

சம­கால ஓவி­யக் கலை­ஞர்­களின் சில படைப்­பு­களும் ஆறு மாதத்­திற்கு ஒரு முறை மாறி மாறி அங்கு காட்­சிப்­ப­டுத்­தப்­படும். எந்­த­வொரு நேரத்­தி­லும் ஏறத்­தாழ 100 படைப்பு­களை அங்கு காணலாம்.

துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மாக திறந்­து­வைத்த பல அம்­சங்­களில் அந்­தக் காலைக்கூட­மும் ஒன்று.

பூம­லை­யின் விரி­வாக்­கத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக புதிய அம்­சங்­கள் இடம்­பெ­று­கின்­றன. 'கேலப் ஹவுஸ் எண் 5'ம் புதிய நோக்­கத்­து­டன் புதுப்­பிக்­கப்­பட்டு இருக்­கிறது. இது 1898ல் கட்­டப்­பட்­டது. கால­னித்­துவ காலத்­தைப் பறை­சாற்­றும் ஆகப் பழைய பங்களா இதுவே என்று தெரி­கிறது.

அது இப்­போது காட்­டு­வளக் கண்டுபி­டிப்பு மைய­மா­கத் திகழ்­கிறது. இந்த மையம் ஓசி­பிசி ஆய்­வுத் தோட்­டத்­தில் அமைந்­துள்­ளது.

ஆய்­வுப் பணி­க­ளுக்­கான இட­மாகவும் அது திகழ்­கிறது.

பூமலையில் விளை­யாட்­டுத் திடல் ஒன்­றும் புதி­தாக திறக்­கப்­பட்டு உள்­ளது. அதில் சிறார்­கள் விளை­யாடி மகிழ பிரம்­மாண்ட மரம் போன்ற ஏற்­பா­டு­கள் உள்­ளன.

பூமலை மொத்­தம் 8 ஹெக்­டர் பரப்­ப­ள­வில் இப்­போது விரி­வாக்­கம் பெற்று இருக்­கிறது.

இதை­யும் சேர்த்து 82 ஹெக்­டர் நிலப்­ப­ரப்­பில் பரவி பூமலை அமைந்துள்ளது. அதில் பல புதுமை களும் இடம்பெற்றுள்ளன.