இஸ்தானாவில் பிள்ளைகளுடன் முன்னாள் பெண் கைதிகள்; புதிய புத்தகம் வெளியீடு

இஸ்தானாவில் பிள்ளைகளுடன் முன்னாள் பெண் கைதிகள்; புதிய புத்தகம் வெளியீடு

1 mins read
8ecc195f-14f8-4bdb-aea4-0fcde9e7d27d
அதிபர் ஹலிமா யாக்கோப், இஸ்தானாவில் முன்னாள் பெண் கைதிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் 28 பேரிடம் முன்னாள் பெண் கைதி ஒருவரின் கதையை வாசித்தார். படம்: சாவ் பாவ் -

முன்­னாள் பெண் கைதி­களும் அவர்­க­ளின் பிள்­ளை­க­ளு­மாக 28 பேர் நேற்று இஸ்­தா­னா­வுக்­குச் சென்று அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பு­டன் நிகழ்ச்சி ஒன்­றில் கலந்­து­கொ­ண்ட­னர்.

'சுவர்­க­ளுக்கு அப்­பால் அன்பு' என்ற ஒரு புத்­த­கம் அந்த நிகழ்ச்­சி­யில் வெளி­யிடப்­பட்­டது. அந்­தப் புத்­த­கம் முன்­னாள் கைதி­க­ளான பத்து பெண்­க­ளால் எழு­தப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தலை­காட்­டியது முதல் ஓராண்டுக் காலத்­தில் இடம்­பெற்ற முதல் இஸ்­தானா தோட்ட சுற்­றுலா இதுவே ஆகும். அந்­தப் புத்­த­கத்தை giving.sg என்ற முக­வ­ரி­யில் அஞ்­சல் செலவு உட்­பட $40க்கு வாங்­க­லாம். விற்­பனை மூலம் கிடைக்­கும் தொகை 'நியூ லைஃப் ஸ்டோ­ரிஸ்' என்ற அறப்­பணி அமைப்­புக்­குச் செல்­லும்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய அதிபர், முன்னாள் கைதிகளான இத்தகைய தாய்மார்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் தொடர்ந்து சமூகத்தின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.