கொவிட்-19: புதிதாக 17 பேருக்கு பாதிப்பு

கொவிட்-19: புதிதாக 17 பேருக்கு பாதிப்பு

1 mins read
4bc5f482-13b1-4e94-8f9c-a22bc24bf3ea
-

இன்று 17 பேருக்கு புதிதாக கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சிங்கப்பூரில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 60,105க்கு அதிகரித்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட 17 பேர் சிங்கப்பூருக்கு வெளியே இந்நோய்த் தொற்றினர். சமூகத்திலும் ஊழியர் தங்கும் விடுதிகளிலும் புதிய சம்பவங்கள் இன்று பதிவாகவில்லை. இது குறித்த மேல் விவரங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவிக்கப்படும்.

கொவிட்-19 கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள சிக்கல்களின் காரணமாக 61 வயது ஆடவர் கடந்த வெள்ளிக்கிழமை மாண்டதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதனுடன் சிங்கப்பூரில் இந்நோயால் மடிந்தோரின் எண்ணிக்கை 30க்கு உயர்ந்தது.