சட்டவிரோதமாக முகக்கவசங்கள் பெற முயற்சி: ஆடவர் கைது

சட்டவிரோதமாக முகக்கவசங்கள் பெற முயற்சி: ஆடவர் கைது

1 mins read
12daceba-7eb4-4d55-8ac2-30f483b60e3c
-

சட்டவிரோதமாகப் பெறப்பட்ட மற்றவர்களின் சொந்த தகவல்களைப் பயன்படுத்தி, தெமாசெக் அறநிறுவன இயந்திரங்களில் இருந்து முகக்கவசங்களைப் பெற்று அதன் மூலம் தொடர்ச்சியாக பல ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் போலிசார் 38 வயதுள்ள ஆடவரைக் கைது செய்துள்ளனர்.

மார்ச் 13 ஆம் தேதி புகார் கிடைத்ததை அடுத்து 24 மணி நேரத்தில் அதிகாரிகள் அந்தச் சந்தேகப் பேர்வழியைக் கைது செய்ததாக போலிஸ் அறிக்கை தெரிவித்தது. அந்த ஆடவர் முகக்கவசங்களைப் பெற சட்ட விரோதமாக 61 முறை முயன்று இருக்கிறார் என்றும் பீஷான் ஸ்திரீட் 22ல் மற்றும் புக்கிட் பாஞ்சாங் பிளாசாவில் இருக்கும் இயந்திரங்களில் இருந்து 11 முகக்கவசங்களை அவர் பெற்று இருக்கிறார் என்றும் அறிக்கை தெரிவித்தது.