ஏப்ரல் 1 முதல் புதிய 'என்எஸ் ஃபிட்' திட்டம்

ஏப்ரல் 1 முதல் புதிய 'என்எஸ் ஃபிட்' திட்டம்

1 mins read
2e46814e-13ad-4a87-af59-830f32782e71
மார்ச் 25 முதல் ns.sg தளம் வழி பயிற்சி வகுப்புகளுக்குப் பதிவுசெய்யலாம். படம்: தற்காப்பு அமைச்சு/ஃபேஸ்புக் -

'ஐபிபிடி' எனப்படும் தனிநபர் உடலுறுதிச் சோதனைக்கான ஆயத்த, மறுதேர்ச்சிக்கான பயிற்சிகளுக்குப் பதிலாக சிங்கப்பூர் ஆயுதப் படை, புதிய திட்டம் ஒன்றை ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது.

தற்போது ஐபிபிடி தொடர்பிலான பயிற்சி அம்சங்களுக்குப் பதிலாக பத்து வகுப்புகள் கொண்ட 'என்எஸ் உடலுறுதி மேம்பாட்டுப் பயிற்சி திட்டம்' (ஃபிட்) அறிமுகப்படுத்தப்படும் என்று ஆயுதப் படை இன்று (மார்ச் 15) தெரிவித்தது. இத்திட்டத்தின்கீழ் 45 இடங்களில் பயிற்சியை மேற்கொள்ள முடியும். தற்போது இத்திட்டத்திற்கென இயங்கிவரும் 13 இடங்களில், தயார்நிலைப் போர்க்கால தேசிய சேவையாளர்கள் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

புதிய திட்டத்தின்கீழ், குறைந்தது ஆறு வெவ்வேறு 'என்எஸ் ஃபிட்' பயிற்சி நடவடிக்கைகளிலிருந்து தேர்ந்தெடுத்த தங்களின் 10 வகுப்புகளை தேசிய சேவையாளர்கள் மேற்கொள்ளலாம்.

மார்ச் 25 முதல் ns.sg தளம் வழி பயிற்சி வகுப்புகளுக்குப் பதிவுசெய்யலாம்.

குறிப்புச் சொற்கள்