தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏப்ரல் 1 முதல் புதிய 'என்எஸ் ஃபிட்' திட்டம்

2 mins read
887f4889-9511-4955-80fb-bc24a1932866
ஜூரோங் லேக் கார்டன்சின் 'எக்டிவ்எஸ்ஜி' பூங்காவில் நடைபெறும் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் உடற்பயிற்சி வகுப்பு. படம்: தற்காப்பு அமைச்சு -

'ஐபிபிடி' எனப்படும் தனிநபர் உடலுறுதி சோதனைக்கான பயிற்சிகளில் மாற்றம் குறித்து சிங்கப்பூர் ஆயுதப் படை

'ஐபி­பிடி' எனப்­படும் தனி­ந­பர் உட­லு­று­திச் சோத­னைக்­கான ஆயத்த, மறுதேர்ச்சிக்கான பயிற்­சி­க­ளுக்­குப் பதி­லாக சிங்­கப்­பூர் ஆயு­தப் படை, புதிய திட்­டம் ஒன்றை ஏப்­ரல் 1 முதல் நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ளது.

தற்­போது ஐபி­பிடி தொடர்­பி­லான பயிற்சி அம்­சங்­க­ளுக்­குப் பதி­லாக பத்து வகுப்­பு­கள் கொண்ட 'என்எஸ் உட­லு­றுதி மேம்­பாட்­டுப் பயிற்சி திட்­டம்' (ஃபிட்) அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என்று எஸ்­ஏ­எஃப் நேற்று தெரி­வித்­தது. இத்­திட்­டத்­தின்­கீழ் 45 இடங்­களில் பயிற்­சியை மேற்­கொள்ள முடி­யும். தற்­போது இத்­திட்­டத்­திற்­கென இயங்­கி­வ­ரும் 13 இடங்­களில், தயார்­நி­லைப் போர்க்­கால தேசிய சேவை­யா­ளர்­கள் பயிற்­சியை மேற்­கொள்­ள­லாம்.

புதிய திட்­டத்­தின்­கீழ், குறைந்­தது ஆறு வெவ்­வேறு 'என்­எஸ் ஃபிட்' பயிற்சி நட­வ­டிக்­கை­க­ளி­லிருந்து தேர்ந்­தெ­டுத்­த தங்­க­ளின் 10 வகுப்­பு­களை தேசிய சேவை­யாளர்­கள் மேற்­கொள்­ள­லாம். மார்ச் 25 முதல் ns.sg தளம் வழி பயிற்சி வகுப்­பு­க­ளுக்­குப் பதி­வு­செய்­ய­லாம்.

ஐபி­பி­டி­யில் தேறா­தோர், தன்­னிச்­சை­யான 10 ஐபி­பிடி ஆயத்தப் பயிற்சி வகுப்­பு­க­ளுக்­குச் செல்­ல­லாம். அல்­லது 20 மறுதேர்ச்சிப் பயிற்சி வகுப்­பு­களில் பங்­கேற்­க­லாம். இது­வரை இப்படித்தான் நடந்து வந்துள்ளது.

இது 'சிக்­க­லா­னது' என்று குறிப்­பிட்ட தேசிய சேவை விவ­கா­ரங்­களின் இயக்­கு­நர் பிரி­கே­டி­யர்-ஜென­ரல் கென்­னத் லியாவ், வரு­டாந்­திர உட­லு­று­தித் தகு­திக்­கு­ரிய அமைப்பு­மு­றையை ஒரு பொதுப்­ப­டை­யான திட்­ட­மாக 'ஃபிட்' நெறிப்­ப­டுத்­தும் என்­றார்.

ஒவ்­வோர் 'என்­எஸ் ஃபிட்' வகுப்­பும் 60 முதல் 75 நிமி­டங்­க­ளுக்கு நீடிக்­கும். தேசிய சேவை­யா­ளர்­களின் பர­ப­ரப்­பான வாழ்க்­கைச் சூழ­லுடன் வகுப்­பு­களை எளி­தில் இணைக்க முடி­யும் என்­றார் அவர்.

தேசிய சேவை மறு­ஆய்­வுக் குழு­வின் திட்­டங்­களில் ஒன்­றான இது, எஸ்­ஏ­எஃப், சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம், ஸ்போர்ட் சிங்­கப்­பூர் ஆகி­ய­வற்­றின் கூட்­ட­ணி­யில் அமைந்­த­தும் ஆகும்.

தற்­போது பூங்­காக்­கள், சாஃப்ரா உடற்­ப­யிற்­சிக் கூடங்­கள், ராணுவ முகாம்­களில் அமைந்த உட­லு­றுதி நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றில் பயிற்சி இடங்­கள் அமைந்­துள்­ளன. இவற்­று­டன் 'எக்­டிவ்­எஸ்ஜி'யின் மூன்று உடற்­ப­யிற்­சிக் கூடங்­கள், சுகா­தார மேம்­பாட்டு வாரி­யத்­தின் 29 இடங்­கள் ஆகி­ய­வற்­றி­லும் என்­எஸ் ஃபிட் திட்­டத்தின் கீழ் தேசிய சேவை­யா­ளர்­கள் பயிற்சி பெற­லாம்.

உள்­து­றைக் குழு­வின் தேசிய சேவை­யா­ளர்­களும் ஜூன் மாதம் முதல் என்­எஸ் ஃபிட் திட்­டத்­தில் இணை­வர் என்று கூறப்­பட்­டது.