புற்றுநோய் ஏற்படும் அபாயம்: மீட்டுக்கொள்ளப்பட்ட உணவுப்பொருள்

1 mins read
8970999b-280f-4b0a-bbeb-23f5b2c01d6e
-

புற்றுநோய் உண்டாக்கக்கூடிய நச்சுத்தன்மை அதிகளவு இருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு, 'இன்ஸ்டன்ட் சாத்தே ஸ்பைசஸ்' என்ற உணவுப் பொருளை மீட்டுக் கொண்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு 'அஃபலாடாக்சின்ஸ்' இதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இவ்வகை நச்சுப்பொருள், நிலக்கடலை போன்ற உணவில் இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி 19, 2022 காலாவதி தேதியைக் கொண்ட 50, 500 கிராம் பாக்கெட்டுகள் அனைத்தையும் மீட்டுக் கொள்ளுமாறும் உற்பத்தி நிறுவனத்திற்கு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. புற்றுநோயைத் தவிர, பிறப்புக் குறைபாடுகளும் ஏற்படும் சாத்தியம் உண்டு என்றும் அமைப்பு தெரிவித்தது. பாக்கெட்டுகளை வாங்கியுள்ள வாடிக்கையாளர்கள் அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.