வீடமைப்புத் திட்டங்களுக்காக நான்கு வட்டாரங்களில் நிலப் பகுதிகள் ஒதுக்கீடு

வீடமைப்புத் திட்டங்களுக்காக நான்கு வட்டாரங்களில் நிலப் பகுதிகள் ஒதுக்கீடு

2 mins read
b56421f0-3cb4-48c2-b45d-7514b141c741
குளோபல் இந்தியன் இண்டர்நேஷனல் பள்ளியின் பாலஸ்டியர் வளாகம் செயல்பட்ட இடம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீட­மைப்­புத் திட்­டங்­க­ளுக்கு வழி­வி­டு­வ­தற்­காக பாலஸ்­டி­யர், தோ பாயோ, பிடோக், ஜூரோங் ஈஸ்ட் ஆகி­ய­வற்­றில் அமைந்­துள்ள நான்கு தளங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் ஒப்­பந்த ஆவ­ணங்­க­ளின்­படி 51 ஜாலான் ராஜா, 1 லோரோங் 6 தோ பாயோ, 58 பிடோக் நார்த் ஸ்தி­ரீட் 3, 571 ஜூரோங் ஈஸ்ட் ஸ்தி­ரீட் 24 ஆகிய இடங்­களில் அத்­த­ளங்­கள் அமைந்­துள்­ளன.

அடுத்த 10 முதல் 15 ஆண்­டு­களின் மேம்­பாட்­டுப் பணி­க­ளை­யுடைய நகர சீர­மைப்பு ஆணை­யத்­தின் பெருந்­திட்­டத்­தின்­கீழ் இத்­தளங்­கள், குடி­யி­ருப்­புக்­கு­ரி­யவை. அதா­வது, வீவக வீடு­கள் அல்­லது தனி­யார் வீடு­கள் அங்­குள்ள நிலத்­தில் கட்­டப்­ப­ட­லாம்.

இதன்­படி, அடை­யா­ளம் காணப்­பட்ட நான்கு நிலப் பகு­தி­களும் பொது அல்­லது தனி­யார் வீட­மைப்­புத் திட்­டங்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது தொடர்­பில் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் விவ­ரிக்­க­வில்லை.

இருப்­பி­னும், மேல்­வி­வ­ரங்­கள் படிப்­ப­டி­யா­கத் தெரி­விக்­கப்­படும். தனி­யார் வீட­மைப்­புக்கு பயன்­ப­டுத்­து­வ­தாக இருந்­தால், ஈராண்­டுக்கு ஒரு முறை நடை­பெ­றும் அர­சாங்க நில விற்­பனை திட்­டத்­தின்­கீழ், மேம்­பாட்­டா­ளர்­க­ளுக்கு நிலப் பகு­தி­கள் விற்­கப்­படும்.

இதற்கு முன் தோ பாயோ விளை­யாட்டு அரங்­கத்­திற்கு எதிரே, காலாங் ஆறு, தீவு விரை­வுச்­சாலை அருகே 51 ஜாலான் ராஜா­வில் குளோ­பல் இந்­தி­யன் இண்­டர்­நே­ஷ­னல் பள்­ளி­யின் பாலஸ்­டி­யர் வளா­கம் அமைந்­தி­ருந்­தது.

யூஹுவா தொடக்­கப்­பள்­ளி­யு­டன் 2002ஆம் ஆண்­டில் இணைக்­கப்­பட்ட யூச்­சின் தொடக்­கப்­பள்­ளிக் கட்­ட­டம் முன்பு, ஜூரோங் ஈஸ்ட் தளத்­தில் செயல்­பட்­டது.

பிடோக் நிலப் பகு­தி­யில் தற்­போது சிறு­வர்­க­ளுக்­கான முஹம்­மதியா சமூ­க­நல இல்­லம் செயல்­பட்டு வரு­கிறது.

ஆனால் அது பாசிர் ரிசில் உள்ள ஒரு புதிய இடத்­திற்கு ஜூன் மாதம் மாற­வுள்­ளது. டௌன்­ட­வுன் பாதை­யில் பிடோக் ரெசெர்­வோர் எம்­ஆர்டி நிலை­யத்­தின் அரு­கில் பிடோக் நிலப் பகுதி அமைந்­துள்­ளது.

கட்­ட­டங்­களை இடிக்­கும் பணி அடுத்த ஆண்டு ஜூலை மாதத்­திற்­கும் மே மாதத்­திற்­கும் இடையே தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

பெய் சுன் பொதுப் பள்ளி, மத­ராசா அல்-அரே­பியா அல்-இஸ்­லா­மியா ஆகி­ய­வற்­றுக்கு அரு­கில் சுமார் 5,500 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் தோ பாயோ நிலம் உள்­ளது. இங்கு நவம்­பர் மாதத்­திற்­குள் கட்­ட­டங்­களை இடிக்­கும் பணி முடி­வடை­யும் என்று கூறப்­ப­டு­கிறது.

ஒப்­பந்த ஆவ­ணங்­களில் பாலஸ்­டி­யர், ஜூரோங் ஈஸ்ட் தளங்­க­ளுக்­கான கட்­டட இடிப்பு தேதி­கள் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.