புதிதாக 12 பேருக்குத் தொற்று; எல்லாருக்கும் தனிமை உத்தரவு

புதிதாக 12 பேருக்குத் தொற்று; எல்லாருக்கும் தனிமை உத்தரவு

2 mins read

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அவர்­கள் அனை­வருமே வெளி­நா­டு­களில் இருந்து இங்கு வந்­த­வர்­கள். வீட்­டி­லேயே தனி­மை­யில் இருக்­கும்­படி அவர்­களுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

புதி­தாகக் கிருமி தொற்­றி­யோரை­யும் சேர்த்து சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 60,117ஆகக் கூடி­யது.

சமூ­கத்­தி­லும் வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­க­ளி­லும் நேற்று புதி­தாக யாருக்­கும் தொற்று இல்லை என்று அமைச்சு அறி­வித்­தது.

ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று வெளி­நா­டு­களில் இருந்து வந்த 17 பேருக்குக் கிரு­மித்­தொற்று இருந்­த­தாக அமைச்சு அறி­வித்து இருந்­தது. அவர்­கள் அனை­வ­ருமே தனி­மை­யில் இருந்­த­போது பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

இரு­வ­ரி­டம் அறி­கு­றி­கள் காணப்­பட்­டன. மற்­ற­வர்­க­ளி­டம் அறி­கு­றி­கள் தென்­ப­ட­வில்லை.

இத­னி­டையே, சமூ­கத்­தில் புதி­தாக கிருமி தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை கடந்த வாரம் இரண்டா­கக் குறைந்­தது என்­றும் அமைச்சு கூறி­யது. சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கார­ண­மாக மொத்­தம் 30 பேர் பலி­யா­கி­விட்­ட­னர்.

இவ்­வே­ளை­யில், கொவிட்-19 கிரு­மியைக் கையா­ளு­வ­தற்­காக அமைக்­கப்­பட்டு இருக்­கும் அர­சாங்க சிறப்­புப் பணிக்­கு­ழு­வின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங், சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யில் ஏறத்­தாழ 10 விழுக்­காட்­டி­ன­ருக்கு முதல் தடுப்­பூசி போடப்­பட்டு இருக்­கிறது என்று ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தார்.

500,000க்கும் மேற்­பட்ட மக்­கள் குறைந்­த­பட்­சம் முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள் என்று ஃபேஸ்புக் பக்­கத்­தில் அவர் குறிப்­பிட்­டார்.

இந்த மாதத்­தில் 60 முதல் 69 வய­துள்­ள­வர்­க­ள் வரை தடுப்­பூசி போடு­வ­தில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­தப்­படும்.

கல்வி போன்ற முன்­னு­ரிமை துறை­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­கும் தடுப்­பூசி இயக்­கம் விரி­வு­ப­டுத்­தப்­படும் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

தடுப்­பூசி மேலும் கிடைக்கும் போது இந்தச் செயல்­திட்­டம் வேகப்­படுத்­தப்­படும் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.