சிங்கப்பூர் நிறுவனங்கள், கடந்த ஓராண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்புடன் இருக்கின்றன.
அடுத்த மாதம் முதல் ஜூன் வரைப்பட்ட மூன்று மாதங்களில் விற்பனை அதிகரிக்கும், நிகர லாபம் கூடும், விற்பனை விலை அதிகமாகும், புதிய தருவிப்பு ஆணைகள் கிடைக்கும், வேலை வாய்ப்புகள் மேம்படும் என்று அவை நம்புகின்றன.
சிங்கப்பூர் கமர்ஷியல் கிரெடிட் பியூரோ (SCCB) என்ற அமைப்பின் காலாண்டு தொழில் வாய்ப்பு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதன் மூலம் இந்த நிலவரங்கள் தெரியவருகின்றன.
இருந்தாலும் நிதி, உற்பத்தி, மொத்த விற்பனை ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் மட்டுமே நன்னம்பிக்கை நிலவரம் தெரியவந்துள்ளது.
கட்டுமானம், போக்குவரத்துத் துறைகளில் நம்பிக்கை அந்த அளவுக்கு இல்லை என்பதையும் அட்டவணை காட்டுகிறது. இந்த அட்டவணை முதல் காலாண்டில் -1.03% ஆக இருந்தது. அது இந்த ஆண்டின் 2வது காலாண்டில் 3.94% ஆக உயர்ந்துள்ளது.
நான்கு காலாண்டுகளாக இறங்குமுகமாகவே இருந்து வந்த அட்டவணை முதன் முதலாக ஏறுமுகமாகத் திரும்பி இருக்கிறது.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் சென்ற ஆண்டின் 2வது காலாண்டில் -7.88% என்ற அளலில் இருந்து இந்த ஆண்டின் 2வது காலாண்டில் 3.94%க்கு அட்டவணை உயர்ந்து இருக்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் முழுவதிலும் செயல்படும் 200 முதலாளிகள், மூத்த நிர்வாகிகளை உள்ளடக்கி ஆய்வு நடத்தி அட்டவணை உருவாக்கப்பட்டது. ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ள நம்பிக்கை, உணர்வுகளைக் கொண்டு பொருளியல் செயல்பாடுகள் வளர்ச்சி ஆகியவற்றில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வர முடியும்.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு தொடங்க இருக்கும் நேரத்தில், உள்ளூர் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள், மேலும் பொருளியல் மீட்சிக்கான அறிகுறியாகத் தெரிகின்றன என்று ஆய்வு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆண்ட்ரி சியா கூறினார். குறிப்பாக நிதிச் சேவை, மொத்த விற்பனை, உற்பத்தித் துறைகள் வளர்ச்சியைத் தொடர்ந்து கட்டிக்காத்து வருகின்றன. உள்ளூர் மற்றும் உலக தேவைகள் கூடுவதை அவை கண்டு வருகின்றன.
இருந்தாலும் கட்டுமானம், போக்குவரத்து துறைகள் இன்னமும் நன்னம்பிக்கை நிலைக்குத் திரும்பவில்லை. உருமாறிய கொரோனா கிருமி பரவுவதால் எல்லைகள் திறக்கப்படவில்லை. கட்டுமானப் பணிகள் சூடுபிடிக்காமலேயே இருந்து வருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.
நிதித்துறையில்தான் ஆக அதிக மான நம்பிக்கை இருக்கிறது என்பது அட்டவணை மூலம் தெரிகிறது. கட்டுமானத்துறை, போக்குவரத்துத் துறை இரண்டையும் ஒப்பிடுகையில் கட்டுமானம் கொஞ்சம் முன்னிலையில் இருக்கிறது.
ஓராண்டுக்குப் பிறகு நிதி, உற்பத்தி, மொத்த விற்பனை துறைகள் ஊக்கம்

