ஒரே தடவை போடப்படும் ஊசி: விரைவில் பரிசோதனை

ஒரே தடவை போடப்படும் ஊசி: விரைவில் பரிசோதனை

1 mins read

அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயல்படும் 'ஆர்க்டுரஸ் தெராபியூட்டிஸ்' என்ற நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள டியுக்-என்யுஎஸ் மருத்துவப் படிப்புத் துறையுடன் சேர்ந்து கூட்டாக கொவிட்-19 தடுப்பூசி ஒன்றை உருவாக்கி வருகிறது.

அந்த நிறுவனம், ஒரே முறை போடப்படும் ஆர்என்ஏ தடுப்பூசியைப் பரிசோதித்துப் பார்க்க ஆயத்தமாகி வரு கிறது. பரிசோதனை இந்த ஆண்டின் பிற்பாதியில் பெரிய அளவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தடவை போடப்படும் அந்தப் புதிய வகை மருந்தை விநியோகிக்க அவ்வளவாக செலவாகாது. அதைப் பாது காப்பாக வைத்திருக்க பூஜ்ஜியத்துக்குக் கீழே குளிர் நிலையை அதிக அளவில் குறைத்து வைத்திருக்க வேண்டிய அவசியமும் இராது.

அந்த மருந்து ARCT-021 என்று குறிப்பிடப்படும். அதனுடைய 3ஆம் கட்ட பரி சோதனை, தடுப்பூசி போடப் படாத மக்களைக் கொண்ட மூன்று இடங்களில் மேற் கொள்ளப்படும் என்று அமெரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜோசப் பேனி கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.