டௌண்டவுன் ரயில் பாதையில் ரயில்களுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பு

டௌண்டவுன் ரயில் பாதையில் ரயில்களுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பு

1 mins read
774f5df5-1c40-4432-a3fe-d18b664bd8fa
புக்கிட் பாஞ்சாங் நிலையத்தின் இரு நடைமேடைகளில் ஒன்று மட்டுமே சேவை வழங்கியதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்தது. படம்: கூகல் மேப்ஸ் வரைபடம் -

டௌண்டவுன் ரயில் பாதையில் இன்று (மார்ச் 16) மாலை உச்ச நேரத்தில் ரயில்களுக்காக பயணிகள் மூன்றரை முதல் நான்கு நிமிடங்கள் காத்திருக்க நேரிட்டது.

அந்த ரயில் பாதையில் அமைந்துள்ள புக்கிட் பாஞ்சாங் எம்ஆர்டி நிலையத்தில் ரயில்கள் தடம் மாற வகைசெய்யும் விசை இயக்கி தொழில்நுட்பக் கோளாற்றால் பாதிக்கப்பட்டதே இந்தச் சேவை தாமதத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் புக்கிட் பாஞ்சாங் நிலையத்தின் இரு நடைமேடைகளில் ஒன்று மட்டுமே சேவை வழங்கியதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்தது.

டௌண்டவுன் ரயில் பாதையில் உள்ள நிலையங்களில் உச்ச நேரத்தில் ரயில்கள் பொதுவாக இரண்டரை நிமிடங்களுக்கு ஒருமுறை செல்லும்.

குறிப்புச் சொற்கள்