ஊழியர் நலனுக்காக தன்னலமற்ற சேவையாற்றிய எஸ்.நாச்சியப்பன் மறைந்தார்

ஊழியர் நலனுக்காக தன்னலமற்ற சேவையாற்றிய எஸ்.நாச்சியப்பன் மறைந்தார்

3 mins read
4f369c12-4760-4434-98c9-1be1b4520803
திரு நாச்சியப்பன். படம்: என்டியுசி -

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

சக்தி, எரி­வாயு ஊழி­யர் தொழிற்­சங்­கத்­தின் கௌரவ முன்­னாள் பொதுச் செய­லா­ளார் நாச்­சி­யப்­பன் ஆர்.கே.சின்­னையா நேற்று காலை கால­மா­னார். அவ­ருக்கு வயது 67.

உடல்­ந­லக் குறை­வால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த அவர் கடந்த ஆறு வாரங்­க­ளாக சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வந்­தார். அவ­ரது உயிர் நேற்று காலை 11.57 மணிக்­குப் பிரிந்­தது என்று அவ­ரது சகோ­தரி மாலா எனும் எஸ்.மர­க­தம் தெரி­வித்­தார். மனைவி ந.வனஜா, மகள் ந.ரோகினி, தாயார் சின்­னையா ராஜ­லெட்­சுமி, சகோ­த­ரர்­கள், சகோ­த­ரி­களை அவர் விட்­டுச்­சென்­றார்.

முப்­பது ஆண்­டு­க­ளுக்கு மேலாக தொழிற்­சங்­கத்­திற்­குச் சேவை­யாற்­றிய உன்­னத மனி­தரை இழந்­து­விட்­ட­தா­கக் கூறி­னார் சக்தி, எரி­வாயு ஊழி­யர் தொழிற்­சங்­கத்­தின் நிர்­வா­கச் செய­லா­ளர் எஸ்.தியா­க­ரா­ஜன், 58. ஊழி­யர்­க­ளுக்­காக தன்­ன­ல­மற்ற ஈடு­பாட்­டு­டன் உழைத்­த­வர் சகோ­த­ரர் நாச்சி என்று புக­ழா­ரம் சூட்­டி­னார் அவர்.

"மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வந்­த­போ­தும் தொழிற்­சங்­கத்­தைப் பற்­றிய சிந்­த­னை­யு­டனே இருந்­தார். ஊழி­யர்­க­ளின் மறு வேலை­வாய்ப்­புப் பற்­றிப் பேசி­னார். அர­சாங்­கம், நிர்­வா­கம், பங்­கா­ளி­கள் என அனை­வ­ர­தும் மரி­யா­தை­யைப் பெற்ற திறன்­மிக்க, அரு­மை­யான மனி­தர் அவர்," என்­றார் அவர்.

கடந்த 2015ஆம் ஆண்டு திரு நாச்­சி­யப்­பன் தொழிற்­சங்­கத்­தின் பொதுச் செய­லா­ளர் பொறுப்­பி­லிருந்து வில­கிக்­கொண்­டார். எனி­னும், கௌரவ முன்­னாள் பொதுச் செய­லா­ளர் என்ற பதவி அவ­ருக்கு அளிக்­கப்­பட்­டது. அவர், தொடர்ந்து இளம் தொழிற்­சங்­க­வா­தி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­வந்­தார்.

ஊழி­யர்­க­ளுக்­கா­க­வும் தொழிற்­சங்­கத்­திற்­கா­க­வும் ஊழி­ய­ர­ணி­யின் சகோ­தர சகோ­த­ரி­க­ளுக்­கா­க­வும் சிங்­கப்­பூ­ருக்­கா­க­வும் சேவை செய்­வதில் தமது வாழ்வை அர்ப்­ப­ணித்­த­வர் சகோ­த­ரர் நாச்சி என்று தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ரஸ் தலை­வர் திரு­வாட்டி மேரி லியூ­வும் பொதுச் செய­லா­ளர் இங் சீ மெங்­கும் இணைந்து வெளி­யிட்ட இரங்­கல் செய்­தி­யில் தெரி­வித்­த­னர்.

ஊழி­யர் நல­னில் மிகுந்த அக்­கறை கொண்­ட­வர் என்­றும் சிரமப் படும், பாதிக்­கப்­பட்­டக்­கூ­டிய ஊழி­யர்­களை அடை­யா­ளம் கண்டு முழு­மூச்­சாக அவர்­க­ளுக்கு உதவ முன்­வ­ரும் நல்­லுள்­ளம் கொண்­ட­வர் என்று இரங்­கல் கடி­தத்­தில் அவர்­கள் குறிப்­பிட்­டி­ருந்­த­னர்.

அவ­ருக்கு வழங்­கப்­பட்ட பிரி­யா­விடை விருந்­தில் அதி­பர் ஹலிமா யாக்­கோப், திரு­வாட்டி ஹோ சிங், அமைச்­சர் லாரன்ஸ் வோங், தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ர­ஸின் பொதுச் செய­லா­ளர் திரு இங் சீ மெங் முத­லி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.

'எஸ்பி' குழு­மத்­தில் பணி­யாற்றி ஓய்­வு­பெற்ற அவ­ருக்கு அந்­தக் குழு­மத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி வோங் கிம் யின் அந்த நிகழ்ச்­சி­யில் பரி­ச­ளித்­தார்.

அர­சாங்­கம், தொழிற்­சங்­கம், நிறு­வ­னம் ஆகி­ய­வற்­றுக்­கி­டையே வலு­வான, நம்­பிக்­கை­யான முத்­த­ரப்பு உறவை உரு­வாக்க நாச்சி இன்­றி­ய­மை­யாத பங்கு வகித்­துள்­ளார் என்று எஸ்பி குழு­மம் அன்று அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் திரு நாச்­சி­யப்­பன் பற்றி பதி­விட்­டி­ருந்­தது.

அவ­ரது உன்­னத சேவைக்­காக 2011ஆம் ஆண்டு பொதுச் சேவை விரு­தும் 2014ஆம் ஆண்டு மே தின தொழி­லா­ளர் தோழர் (நட்­சத்­திர) விரு­தும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

"அவர் மறைந்த செய்தி அறிந்து எனக்கு துக்­கம் தொண்­டையை அடைத்­தது. நானும் அவ­ரும் தொழிற்­சங்­கத்­தில் ஒரே கால­கட்­டத்­தில்­தான் சேர்ந்­தோம். அவ­ரி­டம் நான் கற்­றுக்­கொண்­டது ஏரா­ளம். அவர் தனது உழைப்பு முழு­வ­தை­யும் தொழிற்­சங்­கத்­திற்கே அர்ப்­பணித்­தார். தமி­ழில் சர­ள­மா­கப் பேசக்­கூ­டிய அரு­மை­யான நண்­பரை நாம் இழந்­தோம்," என்று கூறி­னார் முன்­னாள் நிய­மன நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரும் பெட்­ரோல் துறை ஊழி­யர் தொழிற்­சங்­கத்­தின் நிர்­வா­கச் செய­லா­ள­ரு­மான திரு கே. கார்த்­தி­கே­யன்.

"மரி­யா­தைக்­கு­ரிய தொழிற்­சங்க தலை­வர் திரு நாச்­சி­யப்­ப­னின் மறைவு மிகுந்த வருத்­தத்­தைத் தரு­கிறது. தொழி­லா­ளர்­க­ளின் நல­னில் மிகுந்த அக்­கறை கொண்ட சகோ­த­ரர்," என்று கூறி­னார் சிங்­கப்­பூர் தமி­ழா­சி­ரி­யர் சங்­கத் தலை­வர் தன­பால் குமார்.

திரு நாச்­சி­யப்­ப­னின் உடல் லவெண்­டர் ஸ்தி­ரீட்­டி­லுள்ள சிங்­கப்­பூர் காஸ்­கெட் கட்­ட­டத்­தின் ரூபி அரங்­கில் இன்று மாலை 5 மணி வரை மரி­யாதை செலுத்த வைக்­கப்­பட்­டி­ருக்­கும்.

இன்று மாலை 5.30 மணிக்கு மாண்­டாய் தக­னச்­சா­லைக்கு தக­னம் செய்ய எடுத்­துச்­செல்­லப்­படும்.