டௌண்டவுன் ரயில் பாதையில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பு

டௌண்டவுன் ரயில் பாதையில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பு

1 mins read

டௌண்டவுன் ரயில் பாதையில் நேற்று மாலை உச்ச நேரத்தில் ரயில்களுக்காக பயணிகள் மூன்றரை முதல் நான்கு நிமிடங்கள் காத்திருக்க நேரிட்டது. புக்கிட் பாஞ்சாங் எம்ஆர்டி நிலையத்தில் ரயில்கள் தடம் மாற வகைசெய்யும் விசை இயக்கி தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டதே இந்தச் சேவை தாமதத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புக்கிட் பாஞ்சாங் நிலையத்தின் இரு நடைமேடைகளில் ஒன்று மட்டுமே சேவை வழங்கியது.