புதிய, எளிய அம்சங்களுடன் 'சேஃப்என்ட்ரி' முறை

புதிய, எளிய அம்சங்களுடன் 'சேஃப்என்ட்ரி' முறை

2 mins read
1900fd99-f3ca-4e30-87ed-a36ebadb4f59
பயனாளர்கள் பயன்படுத்தும் டிரேஸ்டுகெதர் செயலி (இடது), டிரேஸ்டுகெதர் கருவி (கீழ்), பொது இடங்களின் நடத்துநர்கள் பயன்படுத்தும் சேஃப்என்ட்ரி (வர்த்தகம்) செயலி ஆகியவற்றில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொது இடங்­க­ளுக்­குச் செல்­லும் மக்­கள் ஏப்­ரல் 19ஆம் தேதி முதல் எளி­தான, விரை­வான சேஃப்என்ட்ரி முறை­யைப் பயன்­ப­டுத்தி தங்­கள் வரு­கை­யைப் பதிவு செய்­ய­லாம்.

அதற்கு வழி வகுக்­கும் புதிய 'சேஃப்என்­டிரி கேட்வே பாக்ஸ்' சாத­னத்தை நேற்று நெக்ஸ் கடைத்­தொ­கு­தி­யில் அறி­வார்ந்த தேசம் மற்­றும் மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­கம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

இந்த முறை அந்­தக் கடைத்­தொ­கு­தி­யில் பிப்­ர­வரி 15ஆம் தேதி­யி­லி­ருந்து சோதிக்­கப்­பட்டு வந்­தது.

வரு­கை­யா­ளர்­கள் தங்­கள் வரு­கை­யைப் பதிவு செய்ய டிரேஸ்­டு­கெ­தர் செயலி, டிரேஸ்­டு­கெ­தர் கருவி மூலம் அவர்­கள் செல்­லும் இடத்­தின் வாச­லில் வைக்­கப்­பட்­டுள்ள 'கேட்வே பாக்ஸ்' சாத­னத்­தில் மெல்ல தட்ட வேண்­டும். அந்தச் சாத­னம் கைபே­சி­யை­விட சற்று பெரி­ய­தாக இருக்­கும்.

கடைத்­தொ­குதி, பேரங்­காடி போன்ற இடங்­க­ளின் நடத்­து­நர்­கள் அந்த செயலி அல்­லது கரு­விக்­குப் பதி­லாக சேஃப்என்ட்ரி (வர்த்­த­கம்) செய­லி­யைத் தங்­கள் கைபே­சி­யில் பதி­வி­றக்­கம் செய்­து­கொள்­ள­லாம். அதன் மூலம் வரு­கை­யா­ளர்­க­ளின் வரு­கை­யைப் பதிந்­து­கொள்­ள­லாம்.

கடைத்­தொ­கு­தி­கள், பெரிய சில்­லறை விற்­பனை கடை­கள், திரை­யரங்­கு­கள், மருத்­து­வ­ம­னை­கள், பல­துறை மருந்­த­கங்­கள், கண்­காட்சி, மாநாடு, சந்­திப்­பு­கள் நடை­பெ­றும் 100க்கும் மேற்­பட்ட பங்­கேற்­பா­ளர்­கள் திர­ளும் தேரந்­தெ­டுக்­கப்­பட்ட இடங்­களில் 'சேஃப்என்ட்ரி கேட்வே' முறை­யைப் பயன்­ப­டுத்தத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

தற்­போது நடப்­பில் உள்ள 'க்யூ­ஆர்' குறி­யீட்­டை­யும் அடை­யாள அட்­டை­யை­யும் பயன்­ப­டுத்தி வரு­கை­யைப் பதிவு செய்­யும் முறை­யும் இந்த இடங்­களில் தொடர்ந்து பயன்­ப­டுத்­தப்­படும்.

அர­சாங்­கம் அடை­யா­ளம் கண்டி ருக்­கும் அதி­க­மான மக்­கள் வரத்­தைக் கொண்­டுள்ள இடங்­களில் இந்­தப் புதிய வரு­கைப் பதிவு முறை ஏப்­ரல் 19ஆம் தேதி முதல் அமல்­ப­டுத்­தப்­படும்.

அதிக கூட்­டம் உள்ள கடைத் தொகு­திக்­குள் இருக்­கும் கடை களும் அதில் அடங்­கும். உதா­ர­ணத்­துக்கு, ஒரு கடைத்­தொ­கு­தி­யும் அதற்­குள் உள்ள பேரங்­கா­டி­யும் இந்த 'சேஃப்என்ட்ரி கேட்வே' முறை­யைப் பயன்­ப­டுத்த வேண்­டும்.

'சேஃப்என்ட்ரி கேட்வே பாக்ஸ்' சாத­னம், டிரேஸ்­டு­கெ­தர் செயலி அல்­லது கருவி ஆகி­ய­வற்­று­டன் 25 செண்­டி­மீட்­டர் தூரத்­துக்­குள் காட்­டப்­படும் புளு­டூத் சமிக்ஞை மூலம் வரு­கை­யைப் பதிவு செய்­யும்.

அந்த டிரேஸ்­டு­கெ­தர் செயலி அல்­லது கரு­வியை, 'சேஃப்என்ட்ரி கேட்வே பாக்ஸ்' சாத­னத்­துக்கு அரு­கில் கொண்டு செல்­லும்­போது சாத­னத்­தில் பச்சை விளக்கு எரி­யும். சேஃப்என்ட்ரி (வர்த்­த­கம்) செய­லி­யும் அவ்­வாறே செயல்­படும்.

பய­னா­ளர்­கள் தங்­கள் டிரேஸ்­டு­கெ­தர் செய­லியை 'சேஃப்என்ட்ரி கேட்வே பாக்ஸ்' சாத­னத்­துக்கு அரு­கில் கொண்டு செல்ல வேண்­டும்.

பழைய கைபே­சியை வைத்­தி­ருப்­போர் சேஃப்என்ட்ரி குறி­யீட்டை சிங்­பாஸ் மூலம் ஸ்கேன் செய்­ய­லாம் அல்­லது கைபே­சி­யின் புகைப்­படக் கரு­வி­யைப் பயன்­ப­டுத்­த­லாம்.

கடந்த ஆண்டு அக்­டோ­பர் முதல் டிசம்­பர் வரை டௌன்­ட­வுன் ஈஸ்ட் வளா­கத்­தில் உள்ள மூன்று இடங்­களில் சோதித்து பார்க்­கப்­பட்ட 'சேஃப்என்ட்ரி கேட்வே' முறைக்கு நல்ல வர­வேற்புக் கிடைத்­தது.

இதற்­கி­டையே, மூன்று மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோர் தங்­கள் டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­யைப் பெற்­றுக்­கொண்­டுள்­ள­னர் என்று அறி­வார்ந்த தேசம் மற்­றும் மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­கம் நேற்று தெரி­வித்­தது.