செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

11 புதிய கொவிட்-19 சம்பவங்கள்; அனைவரும் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்

சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 11 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. வெளிநாடுகளிலிருந்து திரும்பிய அவர்கள் அனைவரும் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண் ணிக்கை 60,128. சமூக அளவிலோ, வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளிலோ எவருக்கும் பாதிப்பில்லை என்று சுகாதார அமைச்சின் முதற்கட்ட அறிக்கை தெரிவித்தது.

நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் இருவர் நிரந்தரவாசிகள், இருவர் சார்ந்து இருப்போர் அட்டை வைத்திருப்பவர்கள், மூவர் வேலை அனுமதி அட்டையும் ஐவர் வொர்க் பெர்மிட் அட்டையும் வைத்திருப்பவர்கள் என்று கூறப்பட்டது.

மார்ச் விடுமுறையில் ஹோட்டல்களுக்கு படையெடுக்கும் குடும்பங்கள்

கொவிட்-19 சூழ்நிலையில் வெளிநாட்டுப் பயணங்கள் என்பது ஒரு கனவாகவே இருக்கும் வேளையில், இந்த மார்ச் பள்ளி விடுமுறையைப் பயன்படுத்திக்கொண்டு பல குடும்பங்கள் தங்கள் விடுமுறை காலத்தைக் கழிக்க ஹோட்டல்களுக்குப் படையெடுத்துள்ளன.

இந்த வாரத்தில் வழக்கத்துக்கு மாறாக, தங்களுக்குக் கிடைத்துள்ள ஹோட்டல் அறை முன்பதிவுகள் அதிகரித்து உள்ளன என்று ஹோட்டல்களும் பயண இணையத்தளங் களும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன. இவ்வாண்டின் சராசரி விகிதத்தைக் காட்டிலும் இவ்வாரத்தில் ஹோட்டல் அறைகளின் முன்பதிவு இரட்டிப்பாகியுள்ளது என்றும் இம்மாதம் 13 முதல் 20ஆம் தேதி வரை கிடைத்த முன்பதிவு களில் 30% சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலாப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி செய்யப்பட்டன என்றும் இன்டர்கொன்டினென்டல் சிங்கப்பூர் ஹோட்டல் கூறியது.

ராஃபிள்ஸ், ஹில்டன், குட்வூட் பார்க் போன்ற ஹோட் டல்கள் அனைத்தும் மார்ச் பள்ளி விடுமுறையில் தங்கள் அறைகளின் முன்பதிவு அதிகரித்தது என்று தெரிவித்தன. சில வாடிக்கையாளர்கள் மார்ச் பள்ளி விடுமுறையில் ஹோட்டல் அறைகளுக்கான முன்பதிவை கடந்த ஆண்டு டிசம்பரிலேயே செய்துவிட்டனர் என்று குலூக் முன்பதிவு இணையத் தளத்தின் சிங்கப்பூர் கிளையின் பொது மேலாளர் சாரா வான் விவரித்தார்.

சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலாப் பற்றுச் சீட்டுகள் வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதி காலாவதியாகும் என்பதால் சிங்கப்பூரர்கள் இந்த மார்ச் பள்ளி விடுமுறை காலத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்று கூறிய ஹோட்டல்கள், அதற்கேற்ப தங்கள் பாதுகாப்பு நடைமுறை களில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறின. உதாரணத்துக்கு, இன்டர்கொன்டினென்டல் சிங்கப்பூர் ஹோட்டல், தங்களின் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றுவோரையும் தற்போதைய விருந்தினர்களையும் ஹோட்டலின் வெவ்வேறு பகுதிகளில் பிரித்து வைக்கும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.