தடுப்பூசியின் விளைவாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவோருக்கு $2,000 புதிய வழங்கீடு

தடுப்பூசியின் விளைவாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவோருக்கு $2,000 புதிய வழங்கீடு

2 mins read

கொவிட்-19 தடுப்­பூ­சிக்­குப் பிறகு கடு­மை­யான பக்­க­வி­ளை­வு­கள் கார ணமாக மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­ப­டு­வோ­ர் இன்று முதல் நிதி உத­விக்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

'விஃபாப்' எனும் கொவிட்-19 தடுப்­பூசி தொடர்­பி­லான தடுப்­பூசி பக்கவிளைவு நிதி உத­வித் திட்­டத்­துக்­குச் சமர்ப்­பிக்­கப்­படும் விண்­ணப்­பத்­து­டன் கடு­மை­யான பக்­க­விளை­வுக்­குச் சிகிச்சை அளிக்­கும் மருத்­து­வர் வழங்­கும் மருத்­துவ தக­வல்­களும் இணைக்­கப்­பட வேண்­டும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

அனைத்து விண்­ணப்­பங்­க­ளை­யும் ஒரு சுயேச்­சை­யான மருத்­து­வர்­கள் குழு மறு­ஆய்வு செய்து பக்­க­வி­ளை­வு­கள் எந்த அள­வுக்­குக் கடு­மை­யா­னவை என்­றும் அவை கொடுக்­கப்­பட்ட தடுப்­பூ­சி­யு­டன் எவ்­வி­தம் தொடர்­புள்­ளது என்­றும் முடிவு செய்­யும்.

பக்­க­வி­ளை­வு­க­ளின் கடு­மை­யைப் பொறுத்து ஒருமுறை வழங்­கப்­படும் தொகை நிர்­ண­யிக்­கப்­படும்.

தடுப்­பூசி பக்­க­வி­ளை­வு­க­ளால் மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்சை பெற்று குண­ம­டை­வோ­ருக்கு $2,000 வழங்­கப்­படும்.

தடுப்­பூசி பக்­க­வி­ளை­வு­க­ளால் அதிக சார்பு அல்­லது தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் சேர்க்­கப்­பட்டு, குண­ம­டை­வோ­ருக்கு $10,000 வழங்­கப்­படும்.

தடுப்­பூசி பக்­க­வி­ளை­வு­க­ளால் மர­ண­ம­டை­வோ­ருக்­கும் கடு­மை­யான நிரந்­தர உடற்­குறை ஏற்­பட்­ட­வர்­க­ளுக்­கும் $225,000 வழங்­கப்­படும்.

மேற்­கூ­றப்­பட்ட $10,000 மற்­றும் $225,000 தொகை பற்றி சுகா­தார அமைச்சு கடந்த ஜன­வரி மாதம் 28ஆம் தேதி அறி­வித்­தது.

ஆனால், $2,000 தொகைக்­கான அறி­விப்பு நேற்­று­தான் வெளி­யி­டப்­பட்­டது.

மேற்­கூ­றப்­பட்ட கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்ட பிரி­வி­னர் தவிர்த்து, கடு­மை­யான தடுப்­பூசி பக்­க­விளைவு­க­ளால் பாதிக்­கப்­ப­டு­வோ­ருக்கு கூடு­தல் ஆத­ரவு அளிக்­கும் நோக்­கத்­தில் இந்த $2,000 உத­வித் தொகை வழங்­கீடு பற்றி முடி­வு­எடுக்­கப்­பட்­டது என்­றும் அமைச்சு விளக்­கி­யது.

"விஃபாப் உத­வித் தொகை வழங்­கீடு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மருத்­துவச் செல­வை ஈடு­கட்­டும் தொகை அன்று," என்று வலி­யு­றுத்­திய அமைச்சு, "அது நடப்­பில் உள்ள மெடி­ஷீல்ட் லைஃப், மெடி­சேவ், மெடி­ஃபண்ட் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய அர­சாங்­கத்­தின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிதி உத­வித் திட்­டங்­க­ளுடன் கூடுதலாக வழங்­கப்­படும் நிதி ஆத­ரவு," என்­றும் விவ­ரித்­தது.

சிங்கப்­பூர் குடி­மக்­கள், சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­கள், சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட நீண்­ட­கால அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­ப­வர்­கள் இந்த உத­வித் திட்­டத்­துக்கு தகுதி பெறு­கி­றார்­கள்.

தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாமா என்று யோசிப்­போரை அதனை ஏற்­றுக்­கொள்ள ஊக்­கு­விக்­கும் பொருட்டு இத்­திட்­டம் கடந்த ஜன­வரி மாதம் அறி­விக்­கப்­பட்­டது.