சவால்களைச் சமாளிக்க புதிய வேளாண் முறை

சவால்களைச் சமாளிக்க புதிய வேளாண் முறை

2 mins read
199463e3-b2c1-409d-925a-e3121a3043cf
லிம் சூ காங்கில் 'ஸ்கை கிரீன்ஸ்' செங்குத்துத் தோட்டத்தை புதுமையான முறையில் உருவாக்கிய 'ஸ்கை அர்பன் சொல்யூஷன்ஸ்' நிறுவனர் ஜேக் இங்குடன் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் உரையாடினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உயர்­தொ­ழில்­நுட்­பம் சார்ந்த வேளாண் முறை உள்­ளூ­ரி­லேயே தேவை அதி­க­ரிப்பை ஈடு­செய்யும் வகை­யில் விளைச்­சல் பெற கைகொ­டுக்­கும் என்­றும் இப்­போ­தைக்கு இல்­லா­விட்­டா­லும் எப்­போ­தா­வது இது நமக்கு உத­வும் என்­றும் வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்து உள்­ளார்.

"இது­போன்ற திறன்­களை நாம் வளர்த்­துக்­கொண்­டு­விட்­டால் தேவை ஏற்படும்போது உற்­பத்­தி­யைப் பெருக்­கிக்­கொள்ள முடி­யும்," என அவர் லிம் சூ காங்­ 'ஸ்கை கிரீன்ஸ்' செங்­குத்து காய்­க­றித் தோட்­டத்­தைப் பார்­வை­யிட்ட பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

புதிய வகை நுண்­வே­ளாண் முறை இந்­தத் தோட்­டத்­தில் தொடங்­கப்­பட்டு உள்­ளது. செங்­குத்து காய்­க­றித் தோட்­டம், மீன்­வ­ளர்ப்பு ஆகி­ய­வற்­றோடு தேவைக்கேற்ற வகையில் கையிருப்பு வைத்துக் கொள்ளும் வசதி ஆகியவற்றை நுண்­வே­ளாண்மை முறை உள்­ள­டக்­கும்.

"பருவநிலை மாற்றங்கள், தொற்­று­நோய் பர­வல் அல்­லது ஏற்­று­ம­திக் கட்­டுப்­பா­டு­கள் போன்­றவை கார­ண­மாக, உள்­ளூ­ரில் உற்­பத்­தி­யா­கும் உண­வுப்­பொ­ருட்­க­ளுக்­கான தேவை திடீ­ரென அதி­க­ரிக்­கும்­போது அதற்­கேற்ற வகை­யில் உற்­பத்­திை­யப் பெருக்­கு­வது எப்­படி என்­பதை சிங்­கப்­பூர் அறிந்­தி­ருக்­கும். உல­க­ள­வி­லான உணவு முறை வெவ்­வேறு வகை சவால்­களை எதிர்­நோக்கி உள்­ளது. அதி­க­ரிக்­கும் மக்­கள்­தொ­கைக்கு உயர்­த­ர­மான, விலை கட்­டுப்­ப­டி­யா­கக்­கூ­டிய உணவை அளிக்­கும் வகை­யில் உணவு உற்­பத்­தியை அதி­க­ரிப்­ப­தற்­கான தேவை உள்­ளது. அதே­வேளை விநி­யோ­கத் தொடரை மீட்­டெ­டுப்­பதை உறுதி செய்­வ­தும் முக்­கி­யம். இது­போன்ற தீர்­வு­கா­ணப்­ப­டாத அம்­சங்­கள் கொவிட்-19 கிரு­மித்­தொற்று பர­வல் காலத்­தில் உண­ரப்­பட்­டன.

"உணவு விநிேயா­கத்­தைப் பாது­காக்க சிங்­கப்­பூர் மூன்று உத்­தி­களை தீட்டி வருகிறது. பன்­மு­கத்­தன்மை கொண்ட நாடு­க­ளி­லி­ருந்­தும் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்­தும் இறக்­கு­மதி செய்­வது; உள்­ளூ­ரில் உற்­பத்­தி­யைப் பெருக்கி போது­மான கையி­ருப்பு வைத்­துக்­கொள்­வது; சிங்­கப்­பூ­ரின் பாது­காப்­புக்கு ஏற்ற வகை­யில் ஒட்­டு­மொத்த உணவு விநி­யோ­கத்­திற்­கான ஒவ்­வொரு உத்­திக்­கும் பங்­க­ளிப்­பது-ஆகியன அந்த உத்திகள்.

"பதற்­ற­மில்­லாத வேளை­களில் வெளி­நாட்டு இறக்­கு­ம­தி­க்­கான பல­த­ரப்­பட்ட வழி­களை சிங்­கப்­பூர் கையாள முடி­யும். அப்­போ­து­கூட நமது உள்­நாட்டு வேளாண்-தொழில்­நுட்­பத் திறன்­களை வளர்த்­துக்­கொள்­வ­தில் சிங்­கப்­பூர் முத­லீடு செய்­யும். ஆயி­னும் அவற்­றில் ஓர் அள­வுக்கு மேல் செல்­ல­மு­டி­யா­மல் போகக்­கூ­டும். கார­ணம், பல்­வேறு வகை­யான போட்­டித்­தன்மை

யுடனான வளங்­கள் நம்வசம் உள்­ளன. அதே­நே­ரம், உல­கச்­சூ­ழல் திடீ­ரென தலை­கீழ் மாற்­றம் கண்டு, வெளி­நாட்டு விநி­யோ­கங்­கள் நம்மை வந்து சேர­மு­டி­யாத நிலை ஏற்­ப­டும்­போது உள்­ளூர் உற்­பத்­தியை நாம் பெறக்­கூ­டிய திறன்­களை வளர்த்­தி­ருக்க வேண்­டும்," என்று திரு சான் விளக்­கி­னார்.