இங்குள்ள வேளாண்-உணவு தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் புத்தாக்கத் தீர்வுகள் சிங்கப்பூரின் உணவு பாதுகாப்புச் சவால்களை எதிர் கொள்வதோடு இதர நாடுகளுக்கும் உதவ முடியும் என அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து உள்ளார். 'ஸ்கை அர்பன் சொல்யூஷன்ஸ்' என்னும் உள்ளூர் காய்கறி உற்பத்தி நிறுவனத்தில் நுண் வேளாண்மை முறை தொடங்கப்பட்டு உள்ளதைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார். வெவ்வேறு வகையான வேளாண்-தொழில்நுட்பங்களைப் பெற்றிருப்பது பல்வேறு சவால்
களைத் தீர்க்க உதவும் என்றார் அவர்.
லிம் சூ காங்கில் உள்ள இந்நிறுவனம் தரையில் சரக்குக் கொள்கலன்களில் பல தொட்டிகளை அமைத்து அவற்றில் உணவுக்குத் தேவைப்படும் வெவ்வேறு வகையான மீன்களை வளர்க்கிறது. கொள்
கலன்களின் மேல் பசுமைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 'ஸ்கை கிரீன்ஸ்' எனப்படும் அந்தத் தோட்டத்தில் பல்வேறு பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்த நுண் வேளாண் முறைக்குப் பயன்படுத்தப்படும் இடத்தின் அளவு விவசாயி
களின் தேவைகளுக்கு எற்ப மாற்றி அமைக்கக்கூடியதாக இருக்கும் என்று 'ஸ்கை அர்பன் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தின் திட்ட இயக்குர் நேர்மன் கோ கூறினார்.

