கொவிட்-19 கொள்ளைநோய் பரவலுக்கு எதிரான போரட்டத்தின் நிதி ஆதரவு நடவடிக்கைகளுக்குத் தேைவ்வடும் $11 பில்லியன் தொகையை கடந்த கால நிதி கையிருப்பில் இருந்து எடுக்க அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று அனுமதி வழங்கினார்.
அரசாங்கத்தின் செலவினத் திட்டங்
களுக்கு இம்மாதம் 8ஆம் தேதி நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.
அரசாங்கம் தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டம், ஒவ்வோர் அமைச்சின் செலவின ஒதுக்கீட்டு மசோதாக்கள் ஆகியவற்ளைப் பரிசீலனை செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது நாட்கள் ஒதுக்கினர். அதன் பிறகு அவற்றை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.
மொத்தமாக 2021ஆம் நிதி ஆண்டு முழுமைக்கும் தேவைப்படும் $107 பில்லியன் நிதிக்குரிய திட்டங்கள் இவை.
தொடர்ச்சியாக இரண்டு நிதி ஆண்டுகளில் கடந்தகால நிதி கையிருப்பு எடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் கருத்து தெரிவித்த அதிபர், அசாதாரண சூழலில் நமது பொருளியல் வீழ்ச்சியைத் தடுத்து கொள்ளைநோய் சிரமத்தை நிர்வகிக்க இந்த நிதி மீட்பு பயன்படும் என தெரிவித்தார்.
கொள்ளைநோய் பரவலுக்கு இடையில் பொருளியலை பத்திரமாகத் திறப்பதற்கான செயல்களில் சிங்கப்பூர் ஈடுபட்டு வரும் வேளையில் ஊழியர்களையும் வர்த்தகர்களையும் ஆதரிக்கவும் இது உதவும் என்றார் அவர்.
"நமது மக்கள் மீதான கொள்ளை
நோயின் தாக்கத்தைத் தணிப்பதற்குரிய தீர்க்கமான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர நாம் நமது கடந்த கால நிதி கையிருப்பைப் பயன்படுத்தும் வசதியைப் பெற்றிருப்பது நமது அதிர்ஷ்டம்.
"எதிர்காலம் இன்னும் நிச்சயமற்றதாக இருக்கும் வேளையில் நான் அனைவரும் ஒன்றுசேர்ந்து இயங்குவதைத் தொடருவோமானால் சிரமங்களிலிருந்து மீண்டு எதிர்காலத்திற்குத் தயாராவதற்கான பணிகளில் சிங்கப்பூர் ஈடுபடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது," என்றும் அதிபர் ஹலிமா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது எடுக்கப்படும் $11 பில்லியன் நிதி பொது சுகாதாரம், பாதுகாப்பான மறுதிறப்பு நடவடிக்கைகள் போன்றவை தொடர்பான மீள்திறன் தொகுப்புக்கு நிதியுதவி அளிக்கப் பயன்படும்.
தடுப்பூசி, ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்குமான தொடர் ஆதரவு, விமானப் போக்குவரத்து போன்ற மோசமாகப் பாதிக்கப்பட்ட துறைகளுக்கான உதவி ஆகியன இதனுள் அடங்கும்.

