தாயை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய ஆடவர்

தாயை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய ஆடவர்

2 mins read

சில ஆண்டு கால­மாக தமது 68 வயது தாயை பல­முறை வேண்­டு­மென்றே தாக்­கிய குற்­றத்தை 30 வயது ஆட­வர் நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார். என்டி கோ ஜு ஹுவா எனப்­படும் அவர் குற்­றங்­களில் ஈடு­பட்­ட­போது பட்­ட­மேற்­ப­டிப்பு மாண­வ­ராக இருந்­தார்.

2017ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை ஒரே வீட்­டில் தம்­மு­டன் தங்கி இருந்த தமது தாயை ஆட­வர் துன்­பு­றுத்­தி­யது தொடர்­பான வழக்கு விசா­ரணை நேற்று காணொளி வழி­யாக நடத்­தப்­பட்­டது. முகத்­தில் குத்­தி­யது, முழங்­கா­லால் அந்­த­ரங்க உறுப்­பில் உதைத்­தது உள்­ளிட்ட நான்கு குற்­றச்­சாட்­டு­களை கோ ஒப்­புக்­கொண்­டார்.

தாம் மன­நிலை பாதிக்­கப்­பட்­ட­தா­கக் கூறிக்­கொண்ட அந்த ஆட­வர், படிப்­பில் ஏற்­பட்ட மன உளைச்­சல் கார­ண­மாக தமது தாயை பட்­டினி போட்­ட­தா­க­வும் தாக்­கி­ய­தா­க­வும் கூறி­னார். குளிக்­கவோ வீட்­டில் சத்­தம் போடவோ அந்த மூதாட்­டியை அவர் அனு­ம­திக்­க­வில்லை என நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆக மோச­மான சம்­ப­வம் 2018 டிசம்­ப­ரில் நிகழ்ந்­தது. உலோ­கத் தாழ்ப்­பாளை மூதாட்­டி­யின் அந்­த­ரங்­கப் பகு­தியை நோக்­கிப் பல­முறை கோ வீசி­னார்.

மேலும், தமது தாயின் வாயில் மூன்று முறை அவர் குத்­தி­யது போலிஸ் நடத்­திய விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

துன்­பு­றுத்­தல்­கள் கார­ண­மாக அடைக்­க­லம் நாடி பல­முறை வீட்­டி­லி­ருந்து வெளி­யே­றிய அந்த மூதாட்டி மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டும் பாது­காப்­பான இடத்­தில் வைக்­கப்­பட்­டும் இருந்­தார். இருப்­பி­னும் மறு­ப­டி­யும் அவர் தமது வீட்டுக்கே திருப்பி அனுப்­பப்­பட்­டார். தமது பிள்­ளை­யின் எதிர்­கா­லம் பாதிக்­கப்­பட்டு விடும் என்று கருதி அந்த மூதாட்டி தொடக்­கத்­தில் போலிசை நாட­வில்லை.

இந்த வழக்கு விசா­ரணை வரும் செவ்­வாய்க்­கி­ழ­மைக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்டு உள்­ளது. கோவுக்கு 30 வார சிறைத் தண்­டனை விதிக்­கு­மாறு அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர் நீதி­மன்­றத்­தைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.