தலைமைச் சட்ட அதிகாரிக்கு எதிரான 22 மரண தண்டனை கைதிகளின் மனு தள்ளுபடி

தலைமைச் சட்ட அதிகாரிக்கு எதிரான 22 மரண தண்டனை கைதிகளின் மனு தள்ளுபடி

1 mins read

தலை­மைச் சட்ட அதிகாரிக்கு எதி­ராக வழக்­குத் தொடுப்­பது தொடர்­பான ஆவ­ணங்­க­ளைக் கேட்டு 22 மரண தண்­ட­னைக் கைதி­கள் தாக்­கல் செய்த மனுவை உயர் நீதி­மன்­றம் நேற்று தள்ளுபடி செய்துவிட்­டது. அந்­தக் கைதி­க­ளின் சார்­பில் வழக்­க­றி­ஞர் எம்.ரவி முன்­னிலை ஆனார்.

சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதா வேண்­டாமா என்­ப­தைத் தீர்­மா­னிக்­கு­முன்­னர் அது தொடர்­பான தக­வல்­க­ளைக் கோரு­ வ­தற்­கான நடை­மு­றை­யின்­கீழ் இம்­மனு தாக்­கல் செய்­யப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. மரண தண்­டனை கைதி­க­ளுக்­கும் அவர்­க­ளின் வழக்­க­றி­ஞர்­க­ளுக்­கும் இடை­யி­லான கடி­தங்­களும் அந்­தக் கைதி­க­ளுக்­கும் அவர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்­கும் இடை­யி­லான கடி­தங்­களும் சிங்­கப்­பூர் சிறைச் சேவை துறை­யால் தலை­மைச் சட்ட அதி­கா­ரியின் அலு­வ­ல­கத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­தா­க­வும் அச்­செ­யல்­க­ளுக்­காக வழக்­குத் தொடர கைதி­கள் ஆலோசித்து வந்த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால், தலை­மைச் சட்ட அதி­கா­ரிக்கு எதி­ரான முன்நட­வ­டிக்கை தக­வல்­க­ளைக் கேட்­ப­தில் இருந்து கைதி­கள் விலக்கு அளிக்­கப்­பட்டுள்ளதாகக் கூறிய நீதி­பதி சீ கீ ஊன், மனு­வைத் தள்­ளு­படி செய்­தார்.