நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று தாவரங்களுக்குள் மின்சமிக்ஞை நுழையவும் வெளியேறவும் அனு
மதிக்கும் சிறிய மின்கடத்தி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
மனித மூளை மின்சமிக்ஞையை வெளியேற்றுவதைப்போல தாவரங்களும் தங்களது சுற்றுச்சூழலை விளக்கும் வகையில் மின்சமிக்ஞையை வெளிப்படுத்த இயலும். தாவரங்களின் மோசமான சுகாதாரத்தையும் அவை வாடிவதங்குவதறகான காரணத்தையும் அத்தகையை சமிக்ஞை மூலம் வெளிப்படுத்தும்.
இவ்வாறு தாவரங்களிலிருந்து வெளிப்படும் சமிக்ஞையைப் பயன்படுத்தி அவற்றின் செயல்பாடு மற்றும் வளர்ச்சித் திறன் ஆகியவற்றை அதிகப்படுத்த முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மூன்று மில்லிமீட்டர் அகலமுள்ள 'எலக்ட்ரோட்' எனப்படும் மின்முனை ஒன்றை தாவரத்துடன் ஒட்டி பரிசோதனை செய்தது பல்கலைக்கழகக் குழு.
'தெர்மோஜெல்' எனப்படும் ஒருவகை மென்பசை மூலம் அது ஒட்டப்பட்டது. இந்த மின்முனை, மின்காந்தத்தைக் கடத்தக்கூடியது.
இந்த மென்பசை நீர்மத்திலிருந்து அரைத்திண்ம கரைசலுக்கு மின்சமிக்ஞையை மாற்றக்கூடியதாக இருந்தது. மேலும் ஒட்டப்படும் மின்முனையால் தாவரங்களின் எந்த ஒரு செயல்பாடும் பாதிக்கப்படாது.
திறன்பேசி மூலம் 1.3 வினாடி மின்துடிப்புகள் தாவரத்தில் ஒட்டப்பட்ட மின்முனைக்குச் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த வில்பொறி தாவரம் தனது இரு பக்க இலைகளையும் ஒரு வினாடி மூடித் திறந்தது.
மின்சார சமிக்ஞைக்கு தாவரம் பதிலளிப்பது இதன்மூலம் உணரப்பட்டது. பின்னர் மின்முனை ஒட்டப்பட்ட நிலையிலேயே இயந்திர மனிதனின் கையில் அதனை பல்
கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைத்தனர்.
அரை மில்லிமீட்டர் மெல்லிய மின்கம்பி ஒன்றை அந்த இயந்திர மனிதனின் கைகள் பற்றி எடுக்க தாவர மின் சமிக்ஞை உதவியது.

