செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

நிதிப் பிரச்சினை: உடல் பராமரிப்பு சிகிச்சை நிலைய கிளைகள் மூடல்

'நோவு ஏஸ்தெடிக்ஸ்' என்னும் உடல் பராமரிப்பு சிகிச்சை நிலையம் கடந்த திங்களன்று சிங்கப்பூரில் உள்ள தனது எல்லாக் கிளைகளையும் மூடிவிட்டது. ஏற்கெனவே சிக்கலில் தவிக்கும் நொவினா குளோபல் ஹெல்த்கேர் குழுத்தின் துணை நிறுவனத்தின்கீழ் இது செயல்பட்டு வந்தது. நிதிப் பிரச்சினை காரணமாக நிறுவனத்தின் மருத்துவர்களுக்குக் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதாக வும் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. கிளைகள் மூடப்படுவதற்கு முன்புவரை சிகிச்சைக்கு தங்களால் முன்பதிவு செய்ய இயலவில்லை என்றும் சில கிளைகளில் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பயனீட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். சிலர் போலி சின் உதவியை நாடினர். ஏற்கெனவே பணம் செலுத்தப் பட்டிருந்த சிகிச்சைத்தொகுப்புக்கும் முன்பதிவு ஏற்கப்பட வில்லை என்று சிலர் கூறினர். புகார் பதிவு செய்யப்பட்டி ருப்பதை போலிஸ் உறுதி செய்துள்ளது.

பணிப்பெண்ணை துன்புறுத்திய பெண்ணுக்கு 15 மாத சிறை

பணிப்­பெண்ணை துன்­பு­றுத்­திய குற்­றத்­திற்­காக 41 வயது பெண்­ணுக்கு நேற்று 15 மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. மன் சாவ் யெங் எனப்­படும் அவர், யுனி டிவி லெஸ்­தாரி எனப்­படும் தமது 26 வயது இந்­தோ­னீ­சிய பணிப்­பெண்ணை 2019 பிப்­ர­வரி 4ஆம் தேதி துன்­பு­றுத்­திய குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார். சமை­ய­லறை சன்­னல்­களில் விரல்­ரே­கைத் தடம் பதிந்­தி­ருந்­த­தைக் கண்டு யுனி மீது ஆத்­தி­ர­ம­டைந்த அந்­தப் பெண் இறைச்சி அரைக்­கும் உலோ­கக் கரு­வி­யால் தமது வாயில் தாமே 50 முறை அடித்­துக்­கொள்ள வேண்­டும் என தண்­டனை விதித்­தார். அவ்வாறு அடித்துக் கொண்டதால் யுனியின் கீழ்த்­தா­டை­யில் மூன்று பற்­கள் ஆடி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. அதன் பிற­கும் ஆத்­தி­ரம் தணி­யாமல் பற்­களை உடைக்­கும் நோக்­கில் அந்­தக் கரு­வி­யால் ஒரு­முறை அப்பெண் தாக்­கி­னார். பணிப்­பெண்ணை துன்­பு­றுத்­திய மூன்று குற்­றச்­சாட்­டு­களை அவர் ஒப்­புக்­கொண்­டார். மேலும் நான்கு குற்­றச்­சாட்­டு­கள் தண்­டனை விதிப்­பின்­போது கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டன.

சிறுவர்களின் ஆபாசப் படங்கள்

சிறு­வர்­கள் நிர்­வா­ண­மாக இருக்­கும் 58 காணொளி படங்­களை எடுத்த குற்­றத்தை 16 வயது சிறு­வன் நேற்று நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார். செங்­காங் விளை­யாட்டு வளா­கத்­தில் உள்ள ஆண்­கள் கழிப்­ப­றை­யில் உடை­மாற்­றி­ய­போது தாம் பட­மெ­டுத்­த­தாகவும் 2019ஆம் ஆண்­டில் இரண்டு நாட்­கள் தாம் இவ்­வாறு செய்­த­தா­க­வும் சிறுவன் ஒப்­புக்­கொண்­டார். சிறுவன் தொடர்பான நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு அறிக்­கையை நீதி­பதி கேட்­டுள்­ளார்.