நோன்புப் பெருநாள் சிறப்பு மகிழ்உலா கப்பல் பயணம்

நோன்புப் பெருநாள் சிறப்பு மகிழ்உலா கப்பல் பயணம்

1 mins read
272f75db-9126-439d-b194-3eca540159bc
வசதி குறைந்தோருக்கு ஆதரவளிக்கும் விதமாக ஜாமியா சிங்கப்பூர் அமைப்பும் 'டிரீம் குரூசஸ்' நிறுவனமும் புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் நேற்று கையெழுத்திட்டன. படம்: திமத்தி டேவிட் -

நோன்­புப் பெரு­நா­ளைக் கொண்­டா­டும் வித­மாக, 'வோர்ல்ட் டிரீம்' சொகு­சுக் கப்­ப­லில் நோன்­புப் பெரு­நாள் கருப்­பொ­ரு­ளு­டன் கூடிய உல்­லா­சப் பய­ணத் திட்­டத்தை 'டிரீம் குரூ­சஸ்' நிறு­வ­னம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

மூன்று இரவு நீடிக்­கும் இந்த மகிழ்­உலா பய­ணம், மே 16, 23ஆம் தேதி­களில் தொடங்கும்.

'ஹலால்' முறை சமை­யல் தொடர்­பில் பிர­பல சமை­யல் கலை­ஞர்­கள் பங்­கேற்­கும் நிகழ்ச்­சிக்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. முஸ்­லிம் அல்­லா­த­வர்­களும் இந்த மகிழ்­உலா கப்பலில் பயணம் செய்யலாம். அனு­ம­திச்­சீட்­டின் விலை ஒரு­வ­ருக்கு $179.

இத­னி­டையே, டிரீம் குரூ­சஸ் நிறு­வ­னம், லாப நோக்­க­மின்றி செயல்­படும் ஜாமியா சிங்­கப்­பூர் அமைப்­பு­டன் ஒரு புரிந்­து­ணர்­வுக் குறிப்­பில் கையெ­ழுத்­திட்­டுள்­ளது.

அதன்­படி, குறிப்­பிட்ட குழு விற்­பனை முன்­ப­தி­வு­கள் மூலம் கிடைக்­கும் தொகை­யில் பத்து விழுக்­காட்டை அந்­நி­று­வ­னம், ஜாமியா சிங்­கப்பூர் அமைப்­பிற்கு நன்­கொ­டை­யாக வழங்­கும். ஜாமியா சிங்­கப்­பூர் அமைப்­பி­டம் இருந்து உதவி பெறும் பத்­துக் குடும்­பங்­கள், மே 23ஆம் தேதி தொடங்­கும் நோன்­புப் பெரு­நாள் மகிழ்­உலா கப்­பல் பய­ணத்­திற்கு வர­வேற்­கப்­ப­டு­வர்.

"கொவிட்-19 நோய்ப் பர­வ­லால் வேலை இழந்து, வரு­மா­னம் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு ஆத­ர­வு அளிக்­க­வும் அவர்­க­ளி­டத்­தில் நம்­பிக்­கையை மீட்­டெ­டுக்­க­வும் பல உத­வும் கரங்­கள் தேவைப்­படு­கின்­றன," என்று ஜாமியா சிங்­கப்­பூர் அமைப்­பின் தலை­வர் முகம்­மது ஹஸ்பி அபு பக்­கர் கூறி­னார்.