முந்திய மந்தநிலைகளின்போது இருந்ததைவிட சென்ற ஆண்டில் ஆட்குறைப்பு விகிதம் குறைவு

முந்திய மந்தநிலைகளின்போது இருந்ததைவிட சென்ற ஆண்டில் ஆட்குறைப்பு விகிதம் குறைவு

2 mins read

முந்­திய மந்­த­நி­லை­க­ளின்­போது இருந்­த­தைக் காட்­டி­லும் கடந்த ஆண்­டில் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­டோர் விகி­தம் குறைவு என்று மனி­த­வள அமைச்சு நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட தர­வு­கள் கூறு­கின்­றன.

2001 'டாட்.காம்' பிரச்­சினை, 1998 ஆசி­யப் பொரு­ளி­யல் நெருக்­கடி கால­கட்­டங்­களில் அதி­க­மான ஊழி­யர்­கள் வேலை­யி­ழந்­த­னர். அதன்­பி­றகு, கடந்த ஆண்­டில்­தான் அதி­க­ளவு ஊழி­யர்­கள் வேலை­ இழந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

2019ல் 10,690 பேர் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்ட நிலை­யில், 2020ல் 26,110 பேர் அந்­ந­ட­வ­டிக்­கைக்கு ஆளா­கி­னர்.

சென்ற ஆண்­டில் ஆயி­ரம் ஊழி­யர்­களில் 12.8 பேர் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­னர். முந்­திய மந்­த­நிலை­க­ளின்­போது இந்த விகி­தம், சரா­ச­ரி­யாக ஆயி­ரம் ஊழி­யர்­களுக்கு 22.5 பேர் என்­றி­ருந்­தது.

சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­க­ளைக் காட்­டி­லும் வெளி­நாட்­டி­னரே ஆட்­கு­றைப்­பால் அதி­கம் பாதிக்­கப்­பட்­ட­னர். உள்­ளூர்­வா­சி­களில் ஆயி­ரத்­திற்கு 11.1 பேர் என்றி­ருந்த ஆட்­கு­றைப்பு விகி­தம், வெளி­நாட்­டி­ன­ரி­டத்­தில் ஆயி­ரத்­திற்கு 15.7 பேர் என்­றி­ருந்­தது.

சேவைத் துறை­ ஆகக் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டது. ஆட்­குறைப்பு செய்­யப்­பட்­டோ­ரில் 76 விழுக்­காட்­டி­னர், அதா­வது 19,760 பேர் அத்­து­றை­யைச் சேர்ந்­த­வர்­கள்.

மொத்த விற்­பனை, கலை­கள், பொழு­து­போக்கு மற்­றும் கேளிக்கை, விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆகிய துறை­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­கள் இதில் அடங்­கு­வர்.

எழுத்­துப்­பணி, விற்­பனை, சேவை ஊழி­யர்­களே அதி­கம் ஆட்­கு­றைப்­பிற்கு இலக்­கா­ன­தா­கக் கூறப்­பட்­டது.

50 வய­து­களில் இருந்த மூத்த ஊழி­யர்­களே ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட அதிக வாய்ப்பு நில­வி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

அதே­போல, கடந்த ஆண்­டில் ஆண்­க­ளைக் காட்­டி­லும் பெண்­கள் ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்­கைக்கு ஆளாக அதிக வாய்ப்­பு இ­ருந்­த­­தா­கச் சொல்­லப்­பட்­டது.

ஆட்­கு­றைப்­பிற்கு ஆளா­னோர் வேறு வேலை தேடிக்­கொள்­வ­தற்­கான கால­மும் அதி­க­ரித்­தது. 2019ல் வேலை­யி­ழந்த ஆறு மாதங்­க­ளுக்­குள் 64 விழுக்­காட்­டி­னர் புதிய வேலை தேடிக்­கொண்ட நிலை­யில், 2020ல் அவ்­வி­கி­தம் 62 விழுக்­காடாகக் குறைந்­தது.

அனைத்து தொழில், கல்­வித் தகு­திப் பிரி­வி­ன­ரி­டத்­தி­லும் பெரும்­பா­லும் எல்லா வய­துப் பிரி­வி­ன­ரி­டத்­தி­லும் மறு­வே­லை­வாய்ப்பு விகி­தம் சரிந்­த­தாக அமைச்சு கூறி­யது. 50களில் இருக்­கும் உள்­ளூர்­வா­சி­களி­டத்­தில் மட்­டும் அவ்­வி­கி­தம் முந்­திய 2019ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் சற்று கூடு­த­லாக இருந்­தது.

வேறு வேலை தேடிக்­கொண்­டோ­ரில் 67 விழுக்­காட்­டி­னர் வேறு துறை­க­ளுக்கு மாறி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அதே­போல, 2020ன் கடைசி இரண்டு காலாண்­டு­க­ளாக காலிப் பணி­யி­டங்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்­தது.

சென்ற ஆண்­டின் இறு­திக் காலாண்­டில் காலிப் பணி­யி­டங்­களின் எண்­ணிக்கை 56,500ஆக உயர்ந்­தது.