தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலைக்காக இடம்பெயர 8வது சிறந்த நாடு சிங்கப்பூர்

2 mins read

வேலைக்­காக மக்­கள் இட­பெ­யர விரும்­பும் நாடு­களின் பட்­டி­ய­லில் எட்­டா­வது இடத்­தில் சிங்­கப்­பூர் உள்­ளது. 2014இல் தொடங்கப்­பட்ட உல­க­ளா­விய ஆய்­வில் முதல் 10 இடங்­க­ளுக்­குள் சிங்­கப்பூர் வந்­தி­ருப்­பது இதுவே முதல்முறை.

அதே­நே­ரத்­தில், குறை­வான சிங்­கப்­பூ­ரர்­களே வெளி­நாட்­டில் வேலை செய்ய விரும்­பு­கி­றார்­கள் என்­றும் நேற்று வெளி­யி­டப்­பட்ட அந்த அறிக்கை குறிப்­பிட்­டது.

கிருமிப் பர­வல் தடுப்பு நட­வடிக்­கை­கள் முன்­னு­ரி­மை­ பெற்றுள்ள சூழலில், கொள்­ளை­நோய் பர­வல் சிறந்த இடங்­கள் குறித்த கருத்­துகளை மாற்­றி­விட்­டது என 190 நாடு­களைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 208,800 பேர் பங்­கேற்ற இந்த ஆய்­வில் தெரி­ய­வந்­தது.

2014இல் 24வது இடத்­தி­லி­ருந்த சிங்­கப்­பூர் இப்­போது எட்­டா­வது இடத்­திற்கு முன்­னே­றி­யுள்­ளது. கனடா முத­லி­டத்­தி­லும், அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, ஜெர்­மனி, பிரிட்­டன் ஆகிய நாடு­கள் அடுத்­த­டுத்த நிலை­களிலும் உள்­ளன.

"2020ல் இடம்­ மாற விரும்­பும் திற­னா­ளர்­க­ளின் விருப்­பத்­தேர்­வு­களாக ​சிங்­கப்­பூர், நியூ­சி­லாந்து போன்ற பல ஆசிய-பசி­பிக் நாடு­கள் மாறி­விட்­டன," என்று இணைய வேலை­வாய்ப்பு சந்­தை­யான 'சீக் ஆசியா' கட்­ட­மைப்­பும் பாஸ்­டன் கன்­சல்­டிங் குழு­ம­மும் தொகுத்த இந்த அறிக்கை தெரி­விக்­கிறது.

இது நாடு­க­ளின் கொவிட்-19 கொள்­ளை­நோயை எதிர்கொண்ட விதம் கார­ண­மாக இருக்­க­லாம். இந்நாடுகள் பெரும்­பா­லும் குறைந்த இறப்பு விகி­தங்­களைப் பதி­வு­ செய்­தி­ருப்­ப­து­டன் தொற்­றை­யும் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்­கின்­றன.

கடந்த ஆண்­டின் நான்­காம் காலாண்­டிலிருந்து, ஹாங்­காங், இந்­தோ­னீ­சியா, மலே­சியா, பிலிப்­பீன்ஸ், சிங்­கப்­பூர், தாய்­லாந்து, வியட்­நாம் நாடு­களில் வேலை­வாய்ப்பு­ சரா­ச­ரி­யாக 28 விழுக்­காடு வளர்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாக அறிக்கை மேலும் தெரி­வித்­துள்­ளது.

சிறந்த தொற்­று­நோய் கட்­டுப்­பாட்டு நிர்­வா­கத்­து­டன், சிங்­கப்­பூ­ரின் போட்­டித்­தன்­மை­யும் திற­னா­ளர்­கள் விரும்­பக் கார­ண­மா­கும்.

வலு­வான அனைத்­து­லக வர்த்­த­கம், முத­லீடு தவிர, சிங்­கப்­பூ­ரின் மின்­னி­லக்க உள்­கட்­ட­மைப்பு, தேசிய நிலைத்­தன்மை, புத்­தாக்க கலா­சா­ரம் ஆகி­யவை நம்­பிக்­கையை ஏற்படுத்து­கின்­றன.

சிங்­கப்­பூ­ரின் வாழ்க்­கைத் தரம் தங்­கள் சொந்த நாடு­க­ளு­டன் ஒப்­பி­டத்­தக்­க­தாக இருப்­ப­தால், சீனா, கத்­தார், ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­கள், சுவிட்­சர்­லாந்­து போன்ற நாடு­க­ளி­லி­ருந்து தொழில் வல்­லு­நர்­கள், மேலா­ளர்­கள், பொறி­யி­ய­லா­ளர்­கள் தொழில்­நுட்ப வல்­லு­நர்­கள் சிங்­கப்­பூ­ரில் வேலை செய்ய ஆர்­வ­மாக உள்­ள­னர் என அறிக்கை சுட்டியது.

கிட்­டத்­தட்ட 57 விழுக்­காட்­டி­னர் தங்­கள் சொந்த நாட்­டில் இல்­லாத முத­லா­ளிக்கு தொலை­தூ­ரத்­தி­லி­ருந்து பணி­யாற்ற தயா­ராக இருப்­ப­தா­கக் கூறி­னர். ஆய்­வில் பங்­கேற்­ற­சிங்­கப்­பூ­ரர்­களில் 44 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே தற்­போது வெளி­நாட்­டில் வேலை செய்ய விரும்­பு­கி­றார்­கள். இந்த அளவு 2014ல் 79 விழுக்­கா­டாக இருந்­தது.