பாதிக்கப்பட்டோரை சிங்கப்பூர் உணவு முகவை பரிசோதிக்கிறது 'சில்லி அப்பி' நச்சுணவு சம்பவம்

பாதிக்கப்பட்டோரை சிங்கப்பூர் உணவு முகவை பரிசோதிக்கிறது 'சில்லி அப்பி' நச்சுணவு சம்பவம்

2 mins read

சிங்­கப்­பூர் உணவு முகவை 'சில்லி அப்பி கேட்­ட­ரிங்' என்ற உண­வுச் சேவை வழங்­கும் நிறு­வ­னம் தயா­ரித்த உணவை உண்­ட­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளி­டம் பேசுவதுடன் அவர்களைப் பரிசோதனையும் செய்து வரு­கிறது. ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த முகவை, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளி­டம் அவர்­க­ளி­டம் காணப்­பட்ட அறி­கு­றி­கள், எப்­போது அவர்­கள் கோளாற்றை உணர்ந்­தார்­கள், அவர்­க­ள் உண்ட உணவு விவ­ரங்­கள் போன்­றவை குறித்து கேட்­கப்­ப­டு­வ­தா­கக் கூறி­யது.

எண் 3015 பிடோக் நார்த்­தில் உள்ள சில்லி அப்பி கேட்­ட­ரிங்­கின் இடத்­தை­யும் முகவை சோதனை செய்­கிறது. உணவு மூல­மா­கப் பரவக்­கூ­டிய கிரு­மி­க­ளைப் பற்­றிய உணவு மாதி­ரி­க­ளை­யும் சோதனை செய்­கிறது.

மார்ச் 10ஆம் தேதி புதன்­கி­ழ­மைக்­கும் வெள்­ளிக்­கி­ழ­மைக்­கும் இடையே இந்நிறு­வ­னம் தயா­ரித்த உணவை உட்­கொண்ட பின்­னர் இரைப்பை பிரச்­சி­னை­யால் குறைந்­தது 82 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இவர்­களில் 14 பேர் மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் உணவு முகவை ஞாயிறு அன்று கூறி­யது. அவர்­கள் அனை­வ­ரது உடல்­நி­லை­யும் சீராக இருப்­ப­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 43 பேர் தெமா­செக் தொடக்­கக் கல்­லூ­ரி­யின் பணி­யா­ளர்­கள் என்று கூறி­னார் கல்­லூரி முதல்­வர் லோ ஆய் நார். இவர்­க­ளில் எட்­டுப் பேர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். கல்­லூரி 200க்கும் அதி­க­மான உண­வுப் பொட்­ட­லங்­களை தனது ஊழி­யர்­க­ளுக்­காக 'சில்லி அப்பி' நிறு­வ­னத்­தி­டம் வெள்­ளிக்­கி­ழமை வாங்­கி­யது.

எண் 3015 பிடோக் நார்த்­தில் உள்ள ஷெமி ஈஸ்ட் ஃபூட் கிட்­ச­னில் நான்கு பகு­தி­களில் இந்த உணவு நிறு­வ­னம் இயங்­கு­கிறது. இதில் மூன்­றின் உண­வுத் தரம் 'ஏ' முதல் 'பி' வரை­யில் இருப்­ப­தா­க­வும் மற்­ற பிரிவின் தரம் இன்­ன­மும் மதிப்­பி­டப்­ப­ட­வில்லை என்­றும் உணவு முகவை கூறி­யது.

'சில்லி அப்பி' நிறு­வ­னத்­தின் உணவு வர்த்­த­கம் ஞாயிற்­றுக்­கிழமை முதல் கால­வ­ரை­யின்றி நிறுத்திவைக்கப்பட்­டுள்­ளது.

உணவு சேவை­யில் 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக ஈடு­பட்­டி­ருப்­ப­தா­க­வும் அண்­மைய இரைப்பை பிரச்­சினை குறித்து மிக­வும் கவ­லைப்­ப­டு­வ­தா­க­வும், பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் உடல் நலத்­தில் தான் அக்­கறை கொண்­டி­ருப்­ப­தா­க­வும் அந்த நிறு­வ­னம் கூறியது. விசா­ரணை நடை­பெ­று­கிறது. சம்­ப­வத்­தின் கார­ணத்­தைக் கண்­ட­றிய அதி­கா­ரி­க­ளு­டன் அணுக்­க­மா­கச் செயல்­ப­டுவதாகவும் அது கூறி­யது.

வளா­கத்­தில் பணி­பு­ரி­யும் உண­வைக் கையா­ளும் அனைத்து ஊழி­யர்­களும் மீண்­டும் பணி­யைத் தொடங்­கு­வ­தற்கு முன்பு உணவு பாது­காப்பு படிப்­பின் முதல் நிலை­யில் (லெவல் 1) சேர்ந்து தேர்ச்சி பெற­வேண்­டும். அத்­து­டன், உணவு மூலம் தொற்­றும் கிரு­மி­கள் அவர்­க­ளுக்கு இல்லை என்­ப­தும் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.

உப­க­ர­ணங்­கள், பாத்­தி­ரங்­கள் உட்­பட வளா­கத்தைச் சுத்­தம் செய்­ய­வும் நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ள­ரி­டம் கூறப்­பட்­டுள்­ளது.