9 பேருக்குத் தொற்று

9 பேருக்குத் தொற்று

1 mins read

சிங்­கப்­பூ­ரில் புதி­தாக ஒன்­பது பேருக்கு நேற்று கொரோனா கிரு­மித்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்­கள் அனை­வ­ரும், வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்­த­வர்­கள். இத­னோடு, சிங்­கப்­பூ­ரில் இது­வரை கிருமித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை மொத்­தம் 60,137 ஆகி­யுள்­ளது. பாதிக்­கப்­பட்ட அனை­வ­ரும் சிங்­கப்­பூர் வந்­த­தி­லி­ருந்தே வீட்­டில் தங்­கும் கட்­டாய உத்­த­ரவை நிறை­வேற்­றி­வ­ரு­வ­தா­கச் சுகா­தார அமைச்சு கூறி­யது.

சமூக அள­வில், ஐந்­தா­வது நாளாக எவ­ருக்­கும் கிரு­மித்­தொற்று அடை­யா­ளம் காணப்­ப­ட­வில்லை. ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­க­ளி­லும் தொற்று இல்லை. நேற்­று­முன்­தி­னம் வெளி­நாட்­டி­லி­ருந்து திரும்­பிய 11 பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறு­தி­யா­னது. அவர்­களில் ஒரு­வர் நேப்­பா­ளத்­தி­லி­ருந்து வந்த நான்கு வய­துச் சிறுமி. இவர்­கள் அனை­வ­ருக்­கும் கிரு­மித்­தொற்று அறி­குறி எது­வும் காணப்­ப­ட­வில்லை என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

அனை­வ­ரும் சிங்­கப்­பூர் வந்­த­தி­லி­ருந்து தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர் அல்­லது வீட்­டில் தங்­கும் கட்­டாய உத்­த­ரவை நிறை­வேற்றி வரு­கின்­ற­னர். இவர்களில் ஒருவர் சிறப்பு அனு­மதி அட்டை வைத்­தி­ருக்­கும் மற்­றொ­ரு­வர் பிலிப்­பீன்­சி­லி­ருந்து வந்த கப்­பல் ஊழி­யர். 43 வய­தான அந்த பெண்­ம­ணிக்கு வயிற்­று­வலி ஏற்­பட்­ட­தால் அவர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டார். அது­வரை அவர் கப்­ப­லி­லேயே இருந்தார். இது­வ­ரை­ 59,969 பேர் தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்­துள்­ள­னர். 21 பேர் மருத்­து­வ­மனை­யில் உள்­ள­னர். 30 பேர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் உயி­ரிழந்­துள்­ள­னர்.