திருமணம், பெற்றோர் பருவம் மீது கொவிட்-19 தாக்கம்

திருமணம், பெற்றோர் பருவம் மீது கொவிட்-19 தாக்கம்

2 mins read

திரு­மண வாழ்க்கை, பெற்­றோர் பரு­வம் ஆகி­ய­வற்­றைப் பற்­றிய மக்­க­ளின் எண்­ணங்­களில் கொவிட்-19 எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை மேலும் நன்­கு புரிந்­து­கொள்ள புதிய கலந்­து­ரை­யா­டல் தொடர் ஒன்று அடுத்த மாதம் தொடங்­க­வுள்­ளது.

கொள்­ளை­நோய்ச் சூழ­லால் வேலைச் சந்தை உட்­பட நிச்­ச­ய­மற்ற பொரு­ளி­யல் நிலை ஏற்­பட்­டுள்­ள­தற்கு இடையே குடும்ப வாழ்க்­கை­யில் ஈடு­ப­டு­வது பற்றி உல­கெங்­கி­லும் உள்ள இளை­யர்­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

சென்ற ஆண்டு தேசிய மக்­கள்­தொகை, திறன் பிரிவு மேற்­கொண்ட ஆய்­வில், சிங்­கப்­பூ­ரர்­களுக்­கும் அதே கவலை இருப்­பது தெரியவந்­தது.

திரு­ம­ண­மான 21 வய­துக்­கும் 45 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­களில் 80 விழுக்­காட்­டி­னர், குழந்தை பெற்­றுக்­கொள்­வதை இரண்டு ஆண்­டு­கள் வரை தள்­ளிப்­போ­டத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக ஆய்­வில் தெரி­வித்­த­னர். 'குடும்­பங்­க­ளுக்­கான ஓர் சிங்­கப்­பூரை உரு­வாக்­கு­தல்' என்ற தலைப்பு கொண்ட இக்­க­லந்­து­ரை­யா­டல் தொடர் குறித்து பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா நேற்று அறி­வித்­தார்.

"சிங்­கப்­பூ­ரர்­கள் பலர் குடும்ப வாழ்க்­கை­யில் ஈடு­பட விரும்­பு­கி­றார்­கள். ஆனால் கொள்­ளை­நோயால் அவர்­க­ளின் திட்­டங்­களை மாற்றி அமைக்க வேண்­டி­யுள்­ளது என்­பதை நான் அறி­வேன். இந்த கொள்­ளை­நோய்ச் சூழ­லி­லும் உங்­கள் வாழ்க்­கைத் திட்­டங்­க­ளைத் தொடர்ந்து நீங்­கள் செயல்­ப­டுத்த நாங்­கள் மேலும் எவ்­வாறு உத­வ­லாம் என்­பதை அறிந்­து­கொள்ள விரும்­பு­கி­றோம்," என்­றார் அவர்.

திரு­வாட்டி இந்­தி­ரா­ணி­யு­டன் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் சூலிங் இக்­க­லந்­து­ரை­யா­டல் திட்­டத்தை வழி­ந­டத்­து­வார்.

வெவ்­வேறு வாழ்க்­கைக் கட்­டங்­களில் உள்ள, சிங்­கப்­பூ­ரின் வெவ்­வேறு பகு­தி­களில் வசிக்­கும் சுமார் 400 பேரை இக்­க­லந்­து­ரை­யா­டல் தொட­ரில் ஈடு­ப­டுத்­து­வதே இலக்கு. இத­னால் பல­த­ரப்­பட்ட கருத்­து­கள் திரட்­டப்­படும் என்று அறிக்கை தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரர்­கள், அவர்­க­ளின் துணை­வர், சிங்­கப்­பூ­ரர்­க­ளின் பெற்­றோர் ஆகி­யோர் இக்­க­லந்­து­ரை­யா­டல் தொட­ருக்­குப் பதிந்­து­கொள்­ள­லாம்.

அடுத்த மாதம் தொடங்­கும் கலந்­து­ரை­யா­டல் தொடர், செப்­டம்­பர் மாதம் வரை நீடிக்­கும்.

துணை தேட­லில் உள்­ளோர், திருமணமாகவுள்ளோர், குழந்­தை­கள் இல்­லாத தம்­ப­தி­யர், ஆறு வய­து­வரை பிள்­ளை­கள் உள்ள பெற்­றோர், தொடக்­கப்­பள்ளி செல்­லும் பிள்­ளை­கள் உள்ள பெற்­றோர் ஆகி­யோ­ருக்கு முத­லில் ஆறு கலந்­து­ரை­யா­டல் அமர்­வு­கள் இணை­யம் வாயி­லாக நடத்­தப்­ப­ட­வுள்­ளன.

குடும்ப வாழ்க்­கை­யைத் தொடங்­கு­வது, பிள்­ளை­கள் பெற்­றுக்­கொள்­வது ஆகி­ய­வற்­றைப் பற்றி கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­போர் தங்­க­ளின் கவ­லை­க­ளை­யும் சவால்­களை­யும் பகிர்ந்­து­கொள்­ள­லாம். சவால்­களை எதிர்­கொள்­வ­தற்­கான சில யோச­னை­க­ளை­யும் பரி­மா­றிக்­கொள்­ள­லாம் என்று அறிக்­கை­யில் கூறப்­பட்­டது.

'கரு­வு­று­தல்' தொடர்­பான விவ­கா­ரங்­க­ளைப் பற்றி கருத்து கூறு­வ­தெற்­கென இணைய அமர்வு ஒன்­றும் ஏற்­பாடு செய்­யப்­படும்.

2019ஆம் ஆண்­டில் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் அறி­வித்­தி­ருந்த 'மேலும் வலிமை பெற்று எழு­வ­தற்­கான கலந்­து­ரை­யா­டல்­கள்' கீழ் இப்­பு­திய கலந்­து­ரை­யா­டல் தொடர் அங்­கம் வகிக்­கும்.

'குடும்­பங்­க­ளுக்­கான ஓர் சிங்­கப்­பூரை உரு­வாக்­கு­தல்' கலந்­து­ரை­யா­டல் தொட­ரில் பங்­கேற்க விரும்­பு­வோர், go.gov.sg/families-convo என்ற இணைய முக­வ­ரி­யில் பதிவு செய்­ய­லாம். ஒவ்­வொரு கலந்­து­ரை­யா­ட­லும் தொடங்­கு­வ­தற்கு இரண்டு வாரங்­கள் முன் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பங்­கேற்­பா­ளர்­க­ளுக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­படும்.