எஸ்பிஎச் வருடாந்திர விருதளிப்பில் கொவிட்-19, பொதுத்தேர்தல் செய்திகளுக்கு அங்கீகாரம்

எஸ்பிஎச் வருடாந்திர விருதளிப்பில் கொவிட்-19, பொதுத்தேர்தல் செய்திகளுக்கு அங்கீகாரம்

1 mins read
56a976c4-80db-496d-8e29-31ec15683a9a
-

ஒவ்­வோர் ஆண்­டும் நடை­பெ­றும் சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்­சின் (எஸ்­பி­எச்) விரு­த­ளிப்பு நிகழ்­வில், இம்­முறை வெற்றியைக் குவித்த கதை­கள் யாவும் கொவிட்-19, சிங்­கப்­பூர் பொதுத் தேர்­தல் ஆகியவற்றின் தொடர்­பானவை.

மிகச் சிறந்த செய்­தி­யா­ளர்­களை கௌர­விக்­கும் இவ்­வி­ருது நிகழ்­வில் மொத்­தம் 17 விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

'ஆண்­டின் சிறந்த புகைப்­ப­டம்' என்ற விருதை வென்­ற­வர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்­தி­ரி­கை­யின் சோங் ஜுன் லியாங்.

கொவிட்-19 சூழல் கருதி அனைத்து வெளி­நாட்­டுப் பய­ணங்­க­ளுக்­கும் மலே­சியா சென்ற ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை தடை விதிப்­ப­தாக அறி­வித்­தது.

அதை­ய­டுத்து, நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை நடை­மு­றைக்கு வரு­வ­தற்­குச் சில மணி நேரம் வரை, மலே­சி­யர்­கள் உட்­லண்ட்ஸ் சுங்­கச்­சா­வ­டியை அடை­வ­தற்­காக மார்ச் 17ஆம் தேதி­யன்று காஸ்வே பாலத்­தில் படை­யெ­டுத்து நடந்து வந்­த­னர்.

இக்­காட்­சி­யைச் சிறப்பாகப் படம் பிடித்­திருந்­தார் சோங்.