சக மாணவரைத் தாக்கித் துன்புறுத்தியவர் கல்விக் கழகத்திலிருந்து நீக்கம்

சக மாணவரைத் தாக்கித் துன்புறுத்தியவர் கல்விக் கழகத்திலிருந்து நீக்கம்

2 mins read
9128e184-d36c-416c-b935-3217d0613c1d
இணையத்தில் வலம்வரும்காணொளியில் ஐடிஇ மாணவர்ஒருவர் தாக்கப்பட்டார். படங்கள்: sgfollowsall இன்ஸ்டகிராம் -
multi-img1 of 2

தொழில்­நுட்­பக் கல்­விக் கழக (ஐடிஇ) மாண­வர் ஒரு­வர் சக மாண­வ­ரைத் தாக்­கித் துன்­பு­றுத்­தும் காணொளி ஒன்று இணை­யத்­தில் பர­வ­லாக வலம் வந்­ததை அடுத்து, தாக்­கிய மாண­வர் பள்­ளி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டு­விட்­ட­தாக ஐடிஇ தெரி­வித்­துள்­ளது.

சம்­ப­வம் தொடர்­பில் விசா­ரணை முடி­வ­டைந்­து­விட்­ட­தாக ஐடிஇ அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்­றுக் காலை பதி­விட்­டி­ருந்­தது. பள்ளி வளா­கத்­தில் இத்­த­கைய சம்­ப­வங்­கள் நடக்­கும்­போது தாக்­கு­தல் நடத்­தி­ய­வ­ரைப் பள்­ளி­யி­லி­ருந்து வெளி­யேற்­று­வது வழக்­கம் என்­றும் கூறி­யது.

"சம்­ப­வத்­தில் ஈடு­பட்ட மற்ற மாண­வர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கப்­படும் என்­றும் அவர்­கள் சமூ­கச் சேவை செய்­வர் என்­றும் பதி­வில் குறிப்­பி­டப்­பட்­டது.

சமூக ஊட­கங்­களில் பர­வ­லாக வலம் வந்த அந்­தக் காணொளி, மத்­திய தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கக் கழி­வறை ஒன்­றில் எடுக்­கப்­பட்­டது. மாண­வர் ஒரு­வ­ரி­டம் 'உனக்கு என்ன பிரச்­சினை?' என்று கேட்­ட­வாறு இன்­னொரு மாண­வர் அவ­ரைப் பிடித்து வைத்­துக் கேட்­ப­தாக உள்­ளது. குறைந்­தது மூவர் அரு­கில் நின்று நடப்­பதை வேடிக்கை பார்ப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. அதில் ஓர் இளை­யர் கழி­வறை வாசலை மறைத்­த­வாறு நின்­றார்.

இதை­ய­டுத்து, குறி­வைக்­கப்­பட்ட மாண­வ­ரின் முகக்­க­வ­சத்­தைக் கிழித்து, அவரை அறைந்து, தகாத சொற்­க­ளைக் கூறு­வ­தாக உள்­ளது.

தாக்­கப்­பட்ட மாண­வர் மன்­னிப்பு கேட்­ப­தா­க­வும் பின்­ன­ணி­யில் சிரிப்­புச் சத்­தம் கேட்­ப­தா­க­வும் காணொளி­யில் அமைந்­துள்­ளது.

தாக்­கப்­பட்ட மாண­வ­ரின் தலை­யின் பின்­னால் ஓர் அடி, காலின் பின் பகு­தி­யில் ஓர் உதை எனத் தாக்­கு­தல் தொடர்ந்­தது.

காணொளி எவ்­வாறு எடுக்­கப்­பட்­டது என்­பது குறித்து தக­வல் இல்லை. காணொளி தொடர்­பில் அனைத்து மாண­வர்­களும் நேற்று முன்­தி­னம் அடை­யா­ளம் காணப்­பட்­ட­து­டன் விசா­ரணை நடந்து முடி­யும் வரை ஒரு மாண­வர் பள்ளி­யி­லி­ருந்து இடை­நீக்­கம் செய்­யப்­பட்­ட­தாக முன்­னர் கூறப்­பட்­டது.

கல்வி துணை அமைச்­சர் சுன் சூலிங் இது தொடர்­பில் ஃபேஸ்புக் பதிவு ஒன்­றில், "ஒரு­வரை இவ்­வாறு துன்­பு­றுத்­த­லுக்கு ஆளாக்­கு­வது ஒழுக்­கக் கேடா­னது, கண்­டிக்­கத்­தக்­கது. மேலும், தன்­னைத் தற்­காத்­துக்­கொள்ள முடி­யாத நிலை­யில் இருக்­கும் ஒரு­வரை இப்­ப­டித் தாக்­கு­வது தவறு," என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

பள்ளி இது­போன்ற துன்­பு­றுத்­தல் சம்­ப­வங்­க­ளைக் கடு­மை­யா­கக் கரு­தும் என்­றார் ஐடிஇ முதல்­வர் சுரேஷ் நட­ரா­ஜன்.