பாலர் பருவத்தினரின் திறமைகளை கண்டறிய உதவும் புதிய ஆய்வு

பாலர் பருவத்தினரின் திறமைகளை கண்டறிய உதவும் புதிய ஆய்வு

1 mins read

உல­கில் 'டிஸ்­லெக்­ஸியா' எனும் குறை­பா­ட்டால் கிட்­டத்­தட்ட 10 விழுக்­காட்­டி­னர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனைத்­து­லக புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறி­யுள்­ளன.

இந்நிலையில் சிங்­கப்­பூ­ரில் 'டிஸ்­லெக்­ஸியா' தொடர்­பான சவால்­க­ளுக்­கு ஒவ்­வோர் ஆண்­டும் சுமார் 27,000 பாலர் பள்ளி மாண­வர்­க­ளுக்கு ஆத­ரவு தேவைப்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

வாசித்­தல், எழு­து­தல் திறன்­களில் இத்­த­கைய 'டிஸ்­லெக்­ஸியா' குறை­பா­டுள்ள சிறு­வர்­க­ளுக்­குப் பயிற்சி அளிப்­ப­தில் பாலர் பள்­ளிக் கல்­வி­யா­ளர்­கள் கவ­னம் செலுத்தி வரு­கின்­ற­னர். ஆனால், அப்­பிள்­ளை­க­ளி­டம் இருக்­கக்­கூடிய வேறு திறன்­க­ளைப் பற்றி ஆராய்ந்­தி­டத் தவ­றி­வி­டு­வ­தாக சிங்­கப்­பூர் டிஸ்­லெக்­ஸியா சங்­கத்­தைச் சேர்ந்த கல்­வி­யி­யல் சிகிச்­சை­யா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இவ்­வாறு பிற­ரால் கவ­னிக்­கப்­ப­டாத திற­மை­கள் இருந்­தும் அத்­தி­ற­ன்களை வளர்ப்­ப­தற்­கான முயற்­சி­கள் நடக்­கா­மல் போவ­தால், பாலர்­க­ளுக்­குத் தன்­னம்­பிக்கை குறை­ய­லாம்.

இந்­நிலை நேரா­மல் இருக்க, சங்­கம் புதிய ஆய்வு ஒன்றை மேற்­கொண்­டுள்­ளது. இதன் தொடர்­பில் நேற்று சங்­கத்­தின் வரு­டாந்­திர பாலர் பள்ளி கருத்­த­ரங்­கில் அறி­விக்­கப்­பட்­டது.