பொய் மானியக் கோரிக்கைகள்: மூவர் மீது குற்றச்சாட்டு

பொய் மானியக் கோரிக்கைகள்: மூவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
502cd1c2-02c1-49cf-8b3b-80d0d2d33780
-

முன்­னாள் குழந்­தைப் பரா­ம­ரிப்பு நிலைய இயக்­கு­நர், நிலை­யத்­தில் பணி­பு­ரிந்த ஊழி­யர்­கள் இரு­வர் ஆகி­யோர் மீது பொய்­யான மானி­யக்­கோரிக்­கை­கள் தொடர்­பில் நேற்று குற்­றம் சுமத்­தப்­பட்­டது. பாலர் பருவ மேம்­பாட்டு அமைப்­பி­ட­மிருந்து (இசி­டிஏ) கிட்­டத்­தட்ட $5,000 மதிப்­பிலான குழந்­தைப் பராமரிப்பு மானியத்தை மோசடி மூலம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

நீதி­மன்­றத்­தில் நிலை­யத்­தின் முன்­னாள் இயக்­கு­நர் 53 வயது ஜோச­ஃபின் டான் போ சூ (படம்), அவ­ரது முன்­னாள் ஊழி­யர்­க­ளான அரு­ளா­னந்­தம் ராஜேஸ்­வரி, 53, ஃபாத்திமா பீவி முகம்­மது ஷரிஃப், 42 ஆகி­யோர் முன்­னி­லை­யா­கி­னர்.

டான், ராஜேஸ்­வரி ஆகிய இரு­வர் மீதும் எட்டு குற்­றச்­சாட்­டு­கள், ஃபாத்திமா பீவி மீது நான்கு குற்­றச்­சாட்­டு­கள் என மூவர் மீதும் மோசடிக் குற்­றச்­சாட்­டு­கள் பதி­வா­கி­யுள்­ளன. மூவ­ரும் ஃபெய்த் எடு­கேர் செண்­ட­ரில் ஒன்­றாக வேலை பார்த்­த­தா­க­வும் நிலை­யத்­திற்கு வராத குழந்­தை­க­ளின் பேரில் மானி­யத்­தொ­கையை இசி­டி­ஏ­யி­ட­மி­ருந்து பெறும் மோச­டி­யில் அவர்­கள் ஈடு­பட்­ட­தா­க­வும் கூறப்­படுகிறது.

எட்டு சிறார்­க­ளின் வரு­கைப் பதிவை டான் மற்­றும் ராஜேஸ்­வரி பொய்­யாக உறு­தி­செய்­த­னர். அதே­போல் நான்கு சிறார்­க­ளின் வரு­கைப் பதி­வைப் பொய்­யாக உறு­தி­செய்­த­தன் தொடர்­பில் ஃபாத்திமா பீவி மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

நிலை­யத்­தின் மானி­யக் கோரிக்­கை­களில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முறை­கே­டு­கள் இருந்­ததை இசி­டிஏ கண்­ட­றிந்து இது குறித்து போலி­சா­ரி­டம் தெரி­யப்­ப­டுத்­தி­யது.

பொய்யான கோரிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட மானியங்கள் முழு­வ­தும் மீண்­டும் பெறப்­பட்­டு­விட்­ட­தாக இசி­டிஏ தெரி­வித்­தது. குற்­றம் நிரூ­ப­ண­மா­னால், மூவ­ருக்­கும் 10 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை, அப­ரா­தம் அல்­லது இரண்­டுமே விதிக்­கப்­ப­ட­லாம்.