மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சோதனை நடவடிக்கை ஒன்றில் 20.5 கிலோகிராம் கஞ்சாப்பொருளைக் கைப்பற்றியுள்ளது. இதுவே கடந்த 14 ஆண்டுகளில் ஆக அதிகமான அளவு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஆகும். நேற்று முன்தினம் தொடங்கிய அந்த இரண்டு நாள் சோதனையின்போது அதிகாரிகள் சுமார் 8.3 கிலோகிராம் போதைமிகு அபின், கிட்டத்தட்ட 6.4 கிலோகிராம் கிறிஸ்டலின் மெத்தம்பெட்டமின், 1,091 எஸ்டசி மாத்திரைகள், 1,000 எரிமின்-5 மாத்திரைகள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த அளவு கிட்டத்தட்ட 1.7 மில்லியன் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை 3,950 போதைமிகு அபின் புழங்கிகள், 3,700 ஐஸ் புழங்கிகள் மற்றும் 2,930 கஞ்சா புழங்கிகளுக்கு ஒரு வார புழக்கத்திற்குப் போதுமானதாக உள்ளதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
2007ஆம் ஆண்டு தொடங்கியது முதல் இந்த அளவு ஆகப் பெரியது. அண்மைய தேடுதல் நடவடிக்கையில் 27 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று சிங்கப்பூர் ஆடவர்கள் போதைப்பொருள் குற்றங்களின் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.

