புதிதாக 15 பேருக்கு கொவிட்-19

புதிதாக 15 பேருக்கு கொவிட்-19

1 mins read
cb20bbb8-f68a-415c-ad0a-483c232faad0
-

சிங்கப்பூரில் புதிதாக 15 பேருக்கு கொவிட்-19 தொற்றியுள்ளது. இதனுடன் சிங்கப்பூரில் இந்நோய் தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 60,152க்கு உயர்ந்துள்ளது.

இவர்கள் அனைவருமே வெளிநாட்டிலிருந்து நோய்த்தொற்றுடன் சிங்கப்பூருக்குள் வந்தவர்கள். சிங்கப்பூருக்குள் வரும்போது இவர்களுக்கு வீட்டில் தங்கும் உத்தரவுக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்தது.

சமூக அளவில் எவரும் பாதிக்கப்படவில்லை. ஊழியர் தங்கும் விடுதிகளிலும் எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை. புதன்கிழமையன்று ஒன்பது புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.