சிங்கப்பூரில் புதிதாக 15 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
அவர்களையும் சேர்த்து இங்கு கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 60,152 ஆக உயர்ந்து உள்ளது.
சமூக அளவிலோ வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளிலோ எவருக்கும் புதிதாக தொற்று இல்லை என்று அமைச்சு கூறியது.

